பக்கம்:நாவுக்கரசர்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தல வழிபாடு - (2) 95

“மூவிலை (6,90) என்ற முதற்குறிப்புடைய செந்தமிழ்த் திருத்தாண்டக மாலையால் வழிபடுகின்றார். இதில்,

ஏடேறு மலர்க்கொன்றை அரவு தும்பை

இளமதியம் எருக்குவா னிழிந்த கங்கை சேடெறிந்த சடையானைத் தேவர் கோவைச்

செம்பொன்மால் வரையானைச் சேர்ந்தார் சிந்தைக் கேடிலியைக் கீழ்வேளு ராளுங் கோவைக்

கிறிபேசி மடவார்பெய் வளைகள் கொள்ளும் காடவனைக் கஞ்சனூர் ஆண்ட கோவைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே (6)

என்பது ஆறாவது தமிழ் மணம் கமழும் வாடா நறுமலர். பாசுரங்கள் யாவும் ‘கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத் தைக் கண்ணாரக் கண்டு உய்ந்தேனே’ என்ற தொடரால் முடிகின்றன. இப்பதிகப் பாசுரங்களை பக்தியுடன் ஒதி நாமும் உய்யலாம்.

கஞ்சனூர்ப் பெருமானிடம் விடை பெற்றுக் கொண்டு கோடிக்கா? என்ற தலத்துக்கு வருகின்றார். இத்தலத்து



பூசித்த தலம். காவிரியின் வடகரையிலுள்ளது. ஹரதத் தாச்சாரிய சுவாமிகள் பழுக்கக் காய்ச்சிய பீடத்தின் மேலமர்ந்து சிவபரத்துவத்தையும் சைவ சமய மேன்மை யையும் நிலை நாட்டிப் பல வடமொழி நூல்கள் அருளிச் செய்த தலம். தென்குரங்காடுதுறை, திருமங்கலக்குடி இவற்றையொட்டிய தலம். அப்பர் பெருமான் கோடிக்கா சென்றபோது பாடியருளிய தலம் என்று தருமபுரப் பதிப்பு குறிப்பெழுதும். -

26. கோடிக்கா (திருகோடிக்காவல்): மயிலாடு துறை தஞ்சை இருப்பூர்தி வழியில் நாரசிங்கம் பேட்டை என்ற நிலையத்திலிருந்து 1 கல் தொலைவில் உள்ளது. கும்ப கோணத்திலிருந்து பேருந்து வசதி உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/138&oldid=634129" இலிருந்து மீள்விக்கப்பட்டது