பக்கம்:நாவுக்கரசர்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 நாவுக்கரசர்

எம்பெருமானை மூன்று பதிகங்கள் பாடிப் போற்றுகின் றார். நெற்றிமேற் கண்ணானே (4.51) என்று தொடங் கும் திருநேரிசைப் பதிகத்தின்,

அழல்உமிழ் அங்கை யானே

அரிவையோர் பாகத் தானே தழல்உமிழ் அரவம் ஆர்த்துத்

தலைதனிற் பலிகொள் வானே நிழல்உமிழ் சோலை சூழ

நீர்வரி வண்டி னங்கள் குழல்உமிழ் கீதம் பாடும்

கோடிக்கா வுடைய கோவே. (7) என்பது ஏழாவது பாடல். சங்குலா முன்கை (5.78) என்ற திருக்குறுந்தொகைப் பதிகத்தின்,

நாடி நாரணன் நான்முகன் வானவர் தேடி யேசற வுந்தெரி யாததோர் கோடி காவனைக் கூறாத நாளெலாம் பாடி காவலிற் பட்டுக் கழியுமே (6)

என்பது ஆறாவது பாடல். இதன் 7, 8, 9 வது பாடல்கள் காணப்பெறவில்லை. கண்டலஞ்சேர் நெற்றி” (6.81) என்ற திருத்தாண்டகப் பதிகத்தின்,

வண்டாடும் பூங்குழலாள் பாகன் கண்டாய்,

மறைக்காட் டுறையும் மணாளன் கண்டாய்; பண்டாடு பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்; பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய்; செண்டாடி அவுணர்புரம் செற்றான் கண்டாய்; திருவாரூர்த் திருமூலட் டானன் கண்டாய், கொண்டாடும் அடியவர்தம் மனத்தான் கண்டாய்,

கோடிக்கா அமர்ந்துறையும் குழகன் தானே. (2)

என்பது இரண்டாவது திருத்தாண்டகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/139&oldid=634130" இலிருந்து மீள்விக்கப்பட்டது