பக்கம்:நாவுக்கரசர்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தல வழிபாடு - (2) 99

அடுத்து, திருவேயென் செல்வமே (6.47) என்ற முதற் குறிப்பையுடைய தாண்டகப் பதிகமும் ஆவடுதுற்ை. அண்ணலை ஏத்துவதேயாகும். இதில்,

வரையார் மடமங்கை பங்கா கங்கை

மணவாளா வார்சடையாய் நின்றன் நாமம் உரையா உயிர்போகப் பெறுவே னாகில்

உறுநோய்வங் தெத்தனையும் முற்றாலென்னே கரையா நினைந்துருகிக் கண்ணிர் மல்கிக் -

காதலித்து நின் கழலே யேத்தும் அன்பர்க் கரையா அடியேனை அஞ்சேல் என்னாய்

ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே. (3)

என்பது மூன்றாவது தாண்டகம்.

ஆவடுதுறை அண்ணலிடம் விடைபெற்றுக் கொண்டு தென்குரங்காடு துறை?? வருகின்றார். இரங்காவன் (5.63). என்ற முதற் குறிப்புடைய திருக்குறுந்தொகைப் பதிகத் தால் வழிபடுகின்றார். இதில்,

நாடி கந்தம ராயின தொண்டர்காள்! ஆடு மின்னழு மின்:தொழு மின்:னடி பாடு மின் ;பர மன்பயி லும்மிடம் கூடு மின்:குரங் காடு துறையையே. (8)

என்பது எட்டாவது பாடல். ‘தொண்டர்களே, ஆடுங்கள்; அன்பினால் கரைந்து அழுங்கள்; பாடுங்கள்; குரங்காடு துறையைக் கூடுங்கள்’ என்கின்றார். -

29. தென்குரங்காடுதுறை_(ஆடுதுறை): ஆடுதுறை என்ற இருப்பூர்தி நில்ையத்திலிருந்து ; கல் தொலைவு. காவிரி நதியின் தென்கரையிலிருப்பதால் இது தென்குரங் காடு துறை எனத் திருநாமம் பெற்றது. வடகுரங்காடு துறைக்கு வடகிழக்கில் உள்ளது. இத்தலம். சுக்கிரீவன் பூசித்த தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/142&oldid=634134" இலிருந்து மீள்விக்கப்பட்டது