பக்கம்:நாவுக்கரசர்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 நாவுக்கரசர்

குரங்காடுதுறைக் கூத்தனிடம் விடைபெற்றுக் கொண்டு, இடைமருதூர்’ என்ற திருத்தலத்தை அடைகின்றார். அப்பர் பெருமான். ஐந்து பதிகத்தால் இடைமருதூர் இடங் கொண்ட ஈசனைப் பாடி ஏத்துகின்றார். காடுடைத் சுடலை'(4.35) என்ற முதற் குறிப்பையுடைய பதிகத்தில்,

வேதங்கள் நான்கும் கொண்டு

விண்ணவர் பரவி ஏத்தப் பூதங்கள் பாடி யாடல்

உடையவன் புனிதன் எங்தை பாதங்கள் பரவி நின்ற

பத்தர்கள் தங்கள் மேலை ஏதங்கள் தீர நின்றார்

இடைமரு திடங்கொண் டாரே. (5) என்பது ஐந்தாவது திருநேரிசை. “பாசமொன்றிலராய்'(5.14) என்று தொடங்கும் திருக்குறுந்தொகைப் பதிகத்தில்,

இம்மை வானவர் செல்வம் விளைந்திடும் அம்மையேற்பிற வித்துயர் நீத்திடும் எம்மை யாளும் இடைமரு தன்கழல் செம்மை யேதொழு வார்வினை சிந்துமே. (4)

என்பது நான்காவது திருப்பாடல். ‘பறையின் ஓசையும்’ (5.15) என்ற திருக்குறுந்தொகைப் பதிகமும் இடை மருதூர் மன்னியுறையும் எம்பெருமானை ஏத்தும் திருப் பாடல்களைக் கொண்டது. இதில் ஆறு பாடல்களே கிடைத்துள்ளன. -

30. இடைமருதூர் (திருவிடைமருதூர்): இப்பெயர் கொண்ட இது மயிலாடுதுறை-தஞ்சைஇருப்பூர்தி நிலையம். வரகுண பாண்டியன் பெரும்புகழ் வரலாற்றுத் தொடர் புடையது. பட்டினத்தார் வழிபட்ட தலம். அவர் அருளிய மும்மணிக் கோவை பெற்றது. இங்குத் தைப்பூசத்தன்று காவிரியில் நீராடுதல் சிறந்தது. (சம்பந்தர் 2.57:5; அப்பர் 5.14:1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/143&oldid=634135" இலிருந்து மீள்விக்கப்பட்டது