பக்கம்:நாவுக்கரசர்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 நாவுக்கரசர்

என்று மலை மகளாகிய உமையம்மையின் அன்பிற் சிறந்த பூசனயை ஏற்று மகிழும் சிவக்கொழுந்தீசரை இறைஞ்சு இன்றார். இவ் வேண்டுகோளைக் கேட்டருளிய சிவ பெருமான் நாவுக்கரசரை, நல்லூருக்கு வா” எனப் பணித் தருள்கின்றார். -

இந்தச் செய்தியைச் சேக்கிழார் பெருமான்,

கோவாய் முடுகி’ என்றெடுத்துக்

கூற்றம் வந்து குமைப்பதன்முன் பூவா ரடிகள் என்றலைமேல்

பொறித்து வைப்பாய்’ எனப்புகன்று நாவார் பதிகம் பாடுதலும்

காதன் தானும் கல்லூரில் வாவா என்றே அருள் செய்ய

வணங்கி மகிழ்ந்து வாகீசர்?? என்று குறிப்பிடுவர். நல்லூருக்கு வா’ என்ற அருள் மொழிகேட்டு அகமகிழ்ந்த அப்பர் பெருமான் சிவக் கொழுந்தீசரை மகிழ்ந்து அவர் அருளிபாடிட்ட வண்ணம் திருநல்லூரை: அடைகின்றார். நல்லூரிறைவனை வணங்கி மகிழ்கின்றார். அப்பொழுது சிவபெருமான், ‘தின் நினைப் பை முடிக்கின்றோம்’ என நாவுக்கரசருக்கு உணர்த்தி அவர் தம் சென்னிமிசைத் தம் திருப்பாத மலரைச் சூட்டியருள் கின்றார். அப்பர் பெருமான் இறைவனின் பெருங்

33. பெ. பு, திருநாவுக். 194 -

34. கல்லூர்: மயிலாடு துறை - தஞ்சை இருப்பூர்தி வழியிலுள்ள சுந்தரப் பெருமாள் கோயில் என்ற நிலையத்தி லிருந்து 2 கல் தொலைவிலுள்ளது. அப்பர் திருவடி தீட்சை பெற்ற தலம். அமர்நீதி நாயனார் இறைவன் தந்த கோவணத்திற்குப் பதிலாகத் தாமும் புதல்வனும் மனைவி யும் தராசேறிக் கோவணக் குவியலோடு அர்ப்பணம் செய்த தலம். இவ்விரண்டையும் முறையே அப்பரின் 6.14 என்ற தாண்டகப் பதிகத்திலும் 4.97:7 ஆம் பாடலிலும் காண i) fTl). -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/147&oldid=634139" இலிருந்து மீள்விக்கப்பட்டது