பக்கம்:நாவுக்கரசர்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தல வழிபாடு - (2) 105.

கருணைத் திறத்தை வியந்து கினைந்துருகும் அடியாரை” (6.14) என்ற திருத்தாண்டகச் செந்தமிழ் மாலை பாடிப் பரவிப் போற்றுகின்றார்.

நினைந்துருகும் அடியாரை கைய வைத்தார்; கில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்; சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்:

செழுமதியின் தளிர்வைத்தார்; சிறந்து வானோர். இனந்துருவி மணி மகுடத் தேறத் துற்ற

இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி நனைந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார்; கல்லூர்எம் பெருமானார் கல்லவாறே. (1) என்பது இப்பதிகத்தின் முதல் தாண்டகம், இப்பதிகப் பாசுரங்களின் இறுதிதோறும் திருவடி என் தலைமேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்லவாறே எனத் திருநல்லூர் இறைவன் திருவடி தீட்சை யருளிய அற்புத நிகழ்ச்சியை நினைந்துருகிப் போற்றியுள்ளமையைக் கண்டு மகிழலாம். இதனைச் சேக்கிழார் பெருமான் தனம் பெரிதும் பெற்றுவந்த வறியோன்போல் மனந் தழைத் தார்:85 என்று போற்றுவார். - X

இதனையடுத்து ‘அட்டுமினில் பலி’ (4.97) என்ற திருவிருத்தப் பதிகத்தாலும் வழிபடுகின்றார். இஃது அகத் துறையிலமைந்தது. தலைவி தனது நிலையைத் தோழிக் குரைப்பதாக அமைந்துள்ளது. இதில்,

தேற்றப் படத்திரு கல்லூ

ரகத்தே சிவனிருந்தால் - தோற்றப் படக்கென்று கண்டுகொள்

ளார்தொண்டர் துன்மதியால் ஆற்றிற் கெடுத்துக் குளத்தினில் - தேடிய ஆதரைப்போல் காற்றிற் கடுத்துல கெல்லாத்

திரிதர்வர் காண்பதற்கே. (6)

55.TL, பு : திருநாவுக். 196

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/148&oldid=634140" இலிருந்து மீள்விக்கப்பட்டது