பக்கம்:நாவுக்கரசர்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 நாவுக்கரசர்

நன்மைதான் அறிய மாட்டான்

நடுவிலா அரக்கர் கோமான் வன்மையே கருதிச் சென்று

வலிதனைச் செலுத்த லுற்றுக் கன்மையான் மலையை யோடிக்

கருதித்தான் எடுத்து வாயால் அம்மையோ என்ன வைத்தார்

அவளிவ ணல்லு ராரே. (6) என்பது ஆறாவது நறுமலர். இப்பதிகம் முழுவதும் இராவணன் வரலாறு கூறப் பெறுகின்றது; ஆணவம் மிக்க இராவணனின் அவலநிலை சித்திரிக்கப் பெறுகின்றது.

அவளிவணல்லூர் இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு வெண்ணியூர்க் என்ற திருத்தலத்திற்கு வருகின் றார். இத்தலத்துப் பெருமானை இரண்டு செந்தமிழ் மாலைகளால் வழிபடுகின்றார். முத்தினை (5.17) என்று தொடங்கும் திருக்குறுந்தொகைப் பாமாலையால் முதலில் வழிபடுகின்றார். .

வெண்ணித் தொல்நகர் மேயவெண் திங்களார் கண்ணித் தொத்த சடையார் கபாலியார் எண்ணித் தம்மை கினைத்திருந் தேனுக்கு அண்ணித் திட்டமு துறுமென் நாவுக்கே (2) என்பது இரண்டாவது நறுமலர். தொண்டிலங்கும் (6.59) என்ற திருத்தாண்டகச் செந்தமிழ் மாலையில்,

விடுதனை மெய்யடியார்க் கருள்செய் வாரும்

வேலைவிடம் உண்டிருண்ட கண்டத் தாரும் கூடலர்தம் மூவெயிலும் எரிசெய் தாரும்

குரைகழலாற் கூற்றுவனைக் குமைசெய் தாரும்

40. வெண்ணியூர் (கோயில் வெண்ணி): கோயில் வெண்ணி என்ற இருப்பூர்தி நிலையத்திலிருந்து ; கல் தொலைவு, வெண்ணியூர்க்காக் அப்பர் வந்த விவரங்கள் குறித்துத் தெளிவாக அறிய முடியவில்லை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/151&oldid=634144" இலிருந்து மீள்விக்கப்பட்டது