பக்கம்:நாவுக்கரசர்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தல வழிபாடு - (2) 109

ஆடுமர வரைக்கசைத்தங் காடு வாரும்

ஆலமர நீழலிருந் தறஞ்சொன் னாரும்

வேடுவனாய் மேல்விசயற் கருள்செய் வாரும்

வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே. (6)

என்பது ஆறாவது தமிழ்மணம் கமழும் வாடா நறுமலர்.

வெண்ணியமர்ந்துறைகின்ற விகிர்தனாரிடம் விடை பெற்றுக் கொண்டு திருப்பூவனூர்க் வருகின்றார் திருநாவுக் கரசு. பூவனூர்ப் புனிதன்’ (5.65) என்ற முதற் குறிப்புடைய திருக்குறுந்தொகைப் பாமாலையால் வழிபடுகின்றார்.

இதில்,

அனுச யப்பட்ட துவிது வென்னாதே கனிம னத்தொடு கண்களும் நீர்மல்கிப் புனித னைப்பூவ னுரனைப் போற்றுவார் மனித ரில்தலை யான மனிதரே. (9)

என்பது ஒன்பதாவது பாமலர். பின்னர் நல்லூர்க்கே திரும்பிவிடுகின்றார். நல்லூரினின்று புறப்பட்டுத் திருப் பழனத்திற்கு’ வருகின்றார். ஐந்து பதிகங்களால் இத் தலத்து இறைவனை வழிபடுகின்றார். அகத்துறைப் பதிகத்தால் (4.12) வழிபட்டதை அடுத்த இயலில் காட்டு வேன். ‘ஆடினார் ஒருவர் போலும் (4. 36) என்ற திரு நேரிசைப் பதிகத்தின், -

41. திருப்பூவனூர் : நீடாமங்கலம் இரு ப் பூ ர் தி நிலையத்திலிருந்து 4 கல் தொலைவு.

42. பழனம் (திருப்பழனம்): தஞ்சையிலிருந்து 10 கல் தொலைவிலுள்ளது. சப்தஸ்தான தலங்களுள் ஒன்று, காவிரிக் கரையிலுள்ளது. ஐயாற்றிலிருந்து இத்தலத்திற்கு ஏகும் பாதையில் அப்பூதி அடிகள் தொண்டு செய்த திங்களுர் உள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/152&oldid=634145" இலிருந்து மீள்விக்கப்பட்டது