பக்கம்:நாவுக்கரசர்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 நாவுக்கரசர்

ஆலின் கீழ் அறங்க ளெல்லாம்

அன்றவர்க் கருளிச் செய்து நூலின் கீழ் அவர்கட் கெல்லாம்

நுண்பொருளாகி கின்று காலின்கீழ்க் காலன் தன்னைக்

கடுகத்தான் பாய்ந்து பின்னும் பாலின் கீழ் நெய்யு மானார்

பழனத்தெம் பரம னாரே. (1)

என்பது ஏழாவது திருப்பாடல். “மேவித்து கின்று’ (4.87) என்ற திருவிருத்தப் பதிகத்துள்,

எரித்துவிட்டாய் அம்பினால்

புரமூன்றும் முன்னேபடவும் உரித்து விட்டாய் உமையாள்

நடுக்கெய்தவோர் குஞ்சரத்தைப் பரித்து விட்டாய் பழனத்தரசே

கங்கைவார் சடைமேல் தரித்து விட்டாய் அடியேனைக்

குறிக்கொண் டருளுவதே. (4) என்பது நான்காவது பாடல். “அருவனாய் (5.35) என்ற முதற் குறிப்பினையுடைய திருக்குறுந்தொகைப் பதிகத் தில்,

வையம் வந்து வணங்கி வலம்கொளும் ஐயனை யறியா தார் சிலர் ஆதர்கள் பைகொளா டரவார்த்த பழனன்யால் பொய்யர் காலங்கள் போக்கிடு வார்களே (2)

என்பது இரண்டாவது பாடல்.

அலையார்கடல்” (6.86) என்று தொடங்கும் திருத் தாண்டகச் செந்தமிழ் மாலையில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/153&oldid=634146" இலிருந்து மீள்விக்கப்பட்டது