பக்கம்:நாவுக்கரசர்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகளுடன் தொடர்பு 117

முறை’ எனக் கருதித் தன் மைந்தனுக்கு நேர்ந்த துயர் நிலையைக் குறிப்பிடுகின்றார். இத் துயரச் செய்தியை உணர்ந்த நாவுக்கரசர், ‘நீர் செய்தது மிக நன்றாயுள்ளது! இவ்வாறு வேறு யார் செய்வார்?’ என்று கூறி எழுந்து சென்று உயிர் நீத்த மூத்த திருநாவுக்கரசின் உடம்பினைத் திருக்கோயிலின்முன் கொணரச் செய்து அந்த உடலை நோக்கிச் சிவபெருமான் அருள்புரியும் வண்ணம் ‘ஒன்று கொலாமவர்'(4.18) என்ற முதற் குறிப்பினையுடைய செந் தமிழ்த் திருப்பதிகம் பாடுகின்றார்.

ஒன்று கொலாமவர் சிங்தை யுயர்வரை ஒன்று கொலாமுய ரும்மதி சூடுவர் ஒன்று கொலாமிடு வெண்டலை கையது ஒன்று கொலாமவர் ஊர்வது தானே. (1)

என்பது முதற் பாடல். அருளுருவாகிய சிவபெருமானின் திருமேனிக்கண் அமைந்த அளப்பரிய தோற்றங்களை ஒன்று முதல் பத்து ஈறாக வைத்து எண்ணும் நிலையில் பத்துப் பாசுரங்களைப் பாடியருளுகின்றார். அப்போது உயிர் துறந்த மூத்த திருநாவுக்கரசு உறக்கம் நீங்கி எழுபவனைப் போன்று உயிர் பெற்றெழுகின்றான். எழுந்தவன் நாவுக் கரசரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்குகின்றான். வாகீசர் பெருமானும் அவனுக்கு அன்புடன் திருநீறு வழங்கியருள் கின்றார். இத்திருப்பதிகம் விடந்தீர்த்த திருப்பதிகம்’ என்று வழங்குகின்றது. இது பொதுப் பதிகம்.

அப்பூதியடிகளும் அவர்தம் இல்லத்தரசியாரும் மைந்தன் உயிர் பெற்றெழுந்தமை கண்டும் மகிழ்ச்சியுறாது அப்பர் பெருமான் அமுது செய்தருளக் காலந் தாழ்ந்ததே எனச் சிந்தை நோகின்றனர். அவர்தம் மனக் கருத்தறிந்து வாகீசர் அமுது செய்தருள அவர்களது இல்லத்திற்கு எழுந் தருள்கின்றார். இதனால் மகிழ்ச்சியுற்ற அப்பூதியடிகள் திருநாவுக்கரசர்க்குத் திருந்திய வாச நன்னீர் ஈந்து திரு வமுது செய்தருளுமாறு வேண்டுகின்றார். அப்பொழுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/160&oldid=634154" இலிருந்து மீள்விக்கப்பட்டது