பக்கம்:நாவுக்கரசர்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 நாவுக்கரசர்

அப்பர் பெருமான் புதல்வர்களும் நீரும் இங்கு என்னுடன் இருந்து அமுது செய்வீர்களாக’ எனப் பணித்தருள, அவ் வண்ணமே அப்பூதியடிகளும் அவருடைய புதல்வர்களும் அப்பரடிகளின் இருமருங்கும் அமர எல்லோரும் சேர்ந்து அமுது செய்கின்றனர்.

அப்பூதியடிகளின் விருந்தினராகத் திங்களுரில் சிலநாள் தங்குகின்றார் அப்பர் பெருமான். ஒருநாள் அப்பூதியடி களுடன் திருப்பழனத் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வழிபடச் செல்லுகின்றார். அன்று :சொன் மாலை’ (4.12) என்று தொடங்கும் திருப்பதிகம் பாடுகின்றார். இது மகள் பாசுரமாக அமைகின்றது. இப் பதிகத்தின் இறுதிப் பாடல் இது.

வஞ்சித்தென் வளைகவர்ந்தான் வாரானே யாயிடினும் பஞ்சிற்காற் சிறகன்னம்

பரந்தார்க்கும் பழனத்தான் அஞ்சிப்போய்க் கலிமெலிய

அழலோம்பும் அப்பூதி குஞ்சிப்பூ வாய்கின்ற

சேவடியாய் கோடியையே. (10) தலைமகள் பேசுகின்றாள்: ‘என்னை வஞ்சித்து யான் பிரிவினால் வருந்தி இளைத்த நிலையில் என் கைவளை களைக் கவர்ந்து சென்ற ஆருயிர்த் தலைவனாகிய சிவ பெருமான் என் உள்ளம் மகிழ என்பால் எழுந்தருளி வாரா ராயினும், பஞ்சினையொத்து மெத்தென்ற கால்களையும் சிறகினையுமுடைய அன்னங்கள் பரவி ஆரவாரிக்கின்ற வளமார்ந்த திருப்பழனத்தில் எழுந்தருளியுள்ளான். அவன் தானே வாரானாயினும் யானே அப்பதிக்குச் சென்று அவனைக் கண்டு மகிழ்வேன்’ எனக் கருதிய தலைமகள் திருப்பழனத்தை அடைந்து இறைவன் முன்னிலையில் நின்று பாவங்கள் அஞ்சியகன்று அழியும் வண்ணம் நல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/161&oldid=634155" இலிருந்து மீள்விக்கப்பட்டது