பக்கம்:நாவுக்கரசர்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகளுடன் தொடர்பு 119.

வேள்விகளை இயற்றும் மேதகவுடைய அப்பூதியடிகளது திருமுடியின் கண்ணே அணியப்பெற்ற தாமரை மலராக விளங்கும் செம்மையான திருவடிகளையுடைய பெரு மானே, எளியேனை ஏற்றருள்க’ என வேண்டி இறைஞ்சும் முறையில் இத் திருப்பாசுரம் அமைந்துள்ளது. இதனால் அப்பர் பெருமான் அப்பூதியடிகளின்பால் வைத்த பெரு மதிப்பு இனிது புலனாகின்றது. இதில் அப்பூதியாரின் ஒழுக்கத்தின் விழுப்பத்தினையும் சிவனடித் தொண்டினைச் சிறப்பித்தருளினதையும் கண்டு மகிழலாம். அப்பூதியடி களுடன் தங்கியிருந்த காலத்திலோ அல்லது திருப்பழ னத்தில் சில நாட்கள் தங்கியிருந்த பொழுதோ வேறு நான்கு திருப்பதிகங்களைத் திருப்பழனத்தீசன் மீது பாடி யருளியுள்ளார். - -

இந்நிலையில் அருகிலுள்ள சோற்றுத் துறை என்ற திருத்தலத்திற்கு எழுந்தருளுகின்றார்.இதனைச் சேக்கிழார் பெருமான்,

எழும்பணியும் இளம்பிறையும்

அணிந்தவரை எம்மருங்கும் தொழும்பணிமேற் கொண்டருளித் திருச்சோற்றுத் துறைமுதலா தழும்புறுகேண் மையில்கண்ணித்

தானங்கள் பலபாடிச் செழும்பழனத் திறைகோயில்

திருத்தொண்டு செய்திருந்தார். என்று காட்டுவார். சோற்றுத்துறை ஈசனை நாவுக்கரசர் நான்கு பதிகங்களால் பாடி மகிழ்கின்றார். பொய் விரா

6. அப்பர் 4.36; 4.87; 5.85; 6.36 (எட்டாம் இயலில் காட்டப் பெற்றது-பக். 109)

7. சோற்றுத் துறை : தஞ்சையிலிருந்து 7; கல் தொலைவிலுள்ளது, சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று,

8, பெ. பு, திருநாவுக்-212

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/162&oldid=634156" இலிருந்து மீள்விக்கப்பட்டது