பக்கம்:நாவுக்கரசர்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகளுடன் தொடர்பு 121

என்பது ஏழாவது பாடல். பாடல்தோறும் பதினொருமுறை பணிசெய் மடநெஞ்சமே என்று நெஞ்சுக்கு நெறி யமைத்துக் காட்டுகின்றார். மூத்தவனாய் (6.44) என்று தொடங்கும் திருத்தாண்டகப் பதிகத்தில்,

மூத்தவனாய் உலகுக்கு முந்தி னானே

முறைமையால் எல்லாம் படைக்கின் றானே ஏத்தவனாய் ஏழுலகும் ஆயி னானே

இன்பனாய்த் துன்மம் களைகின் றானே காத்தவனாய் எல்லாம்தான் காண்கின் றானே

கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத் தீர்த்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே

திகழொளியே சிவனேஉன் அபயம் நானே...(1) என்பது முதல் திருத்தாண்டகம்.

திருச்சோற்றுத்துறை ஈசனிடம் விடைபெற்றுக் கொண்டு திருவேதிகுடி என்ற திருத்தலத்திற்கு வருகின் றார். ‘கையது காலெரி’ (4.90) என்ற முதற் குறிப்புடைய திருவிருத்தச் செந்தமிழ் மாலையால் தலத்துப் பெருமானை வழிபடுகின்றார். இதில்,

மையணி கண்டன் மறைவிரி

நாவன் மதித்துகந்த மெய்யணி நீற்றன் விழுமிய

வெண்மழு வாட்படையான் செய்ய கமல மணங்கம,

ழுந்திரு வேதிகுடி ஐயனை ஆரா அமுதினை

நாமடைந் தாடுதுமே. (9)

என்பது ஒன்பதாவது திருப்பாடல்.

9. வேதிகுடி (திருவேதிகுடி): தஞ்சை-மயிலாடுதுறை இருப்பூர்தி வழியில் திட்ட்ை என்ற நிலையத்திலிருந்து 3 தல் தொலைவு. சப்த ஸ்தானங்களுள் ஒன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/164&oldid=634158" இலிருந்து மீள்விக்கப்பட்டது