பக்கம்:நாவுக்கரசர்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 நாவுக்கரசர்

வேதிகுடிச் செல்வப் பிரானிடம் விடைபெற்றுக் கொண்டு திருக்கண்டியூர் வருகின்றார். வானவர் தானவர் (4.98) என்ற முதற்குறிப்புடைய திருவிருத்தப் பாமாலையால் வழிபடுகின்றார். இதில்,

அட்டும் ஒலிநீர் அணிமதி

பும்மல ஏானவெல்லாம் ஒட்டுப் பொதியும் சடைமுடி

யான்இண்டை மாலையங்கைக் கட்டும் அரவது தானுடை

யான்கண்டி யூரிருந்த கொட்டும் பறையுடைக் கூத்தனை யாமண்டர் கூறுவதே (8) என்பது எட்டாவது பாமலர்.

இதன் பின்னர் திருப்பழனத்தில் பல நாட்கள் தங்கி யிருந்து மனம் மொழி மெய்களால் திருத்தொண்டு புரிந்து வருகின்றார். பின்னர் தமக்குத் திருவடித் தீட்சையருளிய திருநல்லூர்ப் பெருமானைக் காணப் பெரு விருப்பம் கொண்டு திருநல்லூர் வருகின்றார். இதனைச் சேக்கிழார் பெருமான்,

சாலகாள் அங்கமர்ந்து

தந்தலைமேல் தாள்வைத்த ஆலமார் மணிமிடற்றார் -

அணிமலர்ச்சே வடிநினைந்து

10. கண்டியூர் வீரட்டம் : தஞ்சையிலிருந்து திருவை யாறு போகும் பேருந்து வழியில் 6 கல் தொலைவிலுள்ளது. சப்த ஸ்தானங்களுள் ஒன்று. ஆதிகாலத்தில் ஜம்முகச் சிவனாரைப்போல் பிரமனுக்கும் ஐந்து சிரங்கள் இருந்தன. பிரமன் சமத்துவம் கொண்டாடிச் செருக்குற்றனன். பற் பல உயிர்கட்குத் துன்பம் விளைத்தனன். தேவர் வேண்டு கோளுக்கிரங்கி அவனது ஐந்தாவது சிரசைச் சிவபெருமான் தண்டித் தெறிந்தமையால் கண்டியூர் வீரட்டம் ஆயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/165&oldid=634159" இலிருந்து மீள்விக்கப்பட்டது