பக்கம்:நாவுக்கரசர்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தல பயணம் - (3) 125

வண்பொன் னித்தென் வலஞ்சுழி மேவிய பண்ப னிப்பொ னைச்செய்த பரிசிதே. (9)

என்பது இப்பதிகத்தின் ஒன்பதாவது பாடல். அலையார் புனற் கங்கை’ (6.72) என்ற முதற் குறிப்புடைய திருத் தாண்டகம் பாடிப் போற்றுகின்றார்.

அலையார் புனற்கங்கை நங்கை காண

அம்ப லத்தில் அருநட்ட மாடிவேடந் தொலையாத வென்றியார் கின்றி யூரும்

நெடுங்களமும் மேவிவிடை யைமேல் கொண்டு இலையார்படை கையி லேந்தி எங்கும்

இமையவரும் உமையவளும் இறைஞ்சி யேத்த மலையார் திரளருவிப் பொன்னி சூழ்ந்த

வலஞ்சுழியே புக்கிடமா மருவி னாரே! (1)

இப்பதிகத்தில் ஒரே ஒரு பாடல்தான் உள்ளது. அடுத்த பதிகம் கருமணிபோற்கண்ட’ (6.73) என்ற திருத்தாண் டகப் பதிகம் வலஞ்சுலி, கொட்டையூர் கோடீச்சரம் என்ற இரு தலங்களையும் போற்றுவது. இதில்,

விரைகமழும் மலர்க்கொன்றைத் தாரான் கண்டாய்; வேதங்கள் தொழகின்ற நாதன் கண்டாய்; அரையதனிற் புள்ளியத ளுடையான் கண்டாய்;

அழலாடி கண்டாய்; அழகன் கண்டாய்; வருதிரைநீர்ப் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்;

வஞ்சமனத் தவர்க்கரிய மைந்தன் கண்டாய், குரவமரும் பொழில்புடைசூழ் கொட்டை யூரிற்

கோடிச் சரத்துறையும் கோமான் தானே. (5) என்பது எட்டாவது திருத்தாண்டகம்.

வலஞ்சுலி - கொட்டையூர்ப் பெருமான்களிடம் விடை பெற்றுக் கொண்டு குடமுக்கிற்கு வருகின்றார். பூவணத்

2. குடமுக்கு (கும்பேசுவரர் கோயில்) : கும்பகோணம் இருப்பூர்தி நிலையத்திலிருந்து 1 கல் தொலைவிலுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/168&oldid=634162" இலிருந்து மீள்விக்கப்பட்டது