பக்கம்:நாவுக்கரசர்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i26 நாவுக்கரசர்

தன்’ (5.22) என்ற முதற் குறிப்புடைய திருக்குறுந் தொகைச் செந்தமிழ் மாலையால் குடமூக்கு ஈசனை வழி படுகின்றார். இதில், - -

காமி யஞ்செய்து காலங் கழியாதே ஓமியஞ் செய்தங் குள்ளத் துணர்மினோ சாமி யோடு சரச்சுவ தியவள் கோமி யும்முறை யுங்குட மூக்கிலே. (8) என்பது எட்டாவது தமிழ் மணம் கமழும் வாடா நறுமலர். கும்பேசரிடம் விடைபெற்றுக் கொண்டு குடந்தைக் கீழ்க்கோட்டம் என்ற திருக்கோயிலுக்கு வருகின்றார். சொன்மலிந்தமறை’ (6.75) என்ற முதற் குறிப்பினை யுடைய திருத்தாண்டகச் செந்தமிழ் மாலையைப் புனைந்து கூத்தப் பெருமானை இறைஞ்சுகின்றார். காலன்வலி தொலைத்தகழற் காலர் போலும்

காமனெழில் அழல்விழுங்கக் கண்டார் போலும் ஆலதனில் அறகால்வர்க் களித்தார் போலும்

ஆணொடுபெண் ணலியல்ல ரானார் போலும்

பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒருமுறை நடைபெறும் மகா மகத்தில் (மாமாங்கம்-உலக வழக்கு) கும்பேசுவரர் வெள்ளி இட்ப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளோடு எழுந் தருளி வந்து மகாமகக் குளக்கரையில் தீர்த்தம் கொடுப்பர். அப்போது பல இலட்சக் கணக்கான மக்கள் குளத்துள் முழுவதும் நின்று முழுகித் தரிசனம் செய்வார்கள். இக்குள நீரில் முழுகுவதால் இந்தியாவிலுள்ள கங்கை, யமுனை, கோதாவிரி, கிருஷ்ணை, பெண்ணை, தண்பொருநை, குமரி முதலிய எல்லாத் தீர்த்தங்களிலும் முழுகும் பலன் கிடைக்கும் என்பது புராண வரலாறு. 1981 ஆம் ஆண்டு மகாமகம் கண்டு குளத்தில் மூழ்கும் பேறு எனக்கும் என் மனைவிக்கும் கிடைத்தது.

3. குடந்தை கீழ்க் கோட்டம் (நாகேசுவரன் கோயில்): கும்பகோணத்தின் ஊர் நடுவேயுள்ள பெரிய கோயில். சித்திரை மாதம் மூன்றாம் நாள் காலையில் பகலவன் கிரணங்கள் மூலத்தானத்து மூர்த்தியின்மீது படுகின்றன, (இதையே சூரிய பூசை என்பது மரபு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/169&oldid=634163" இலிருந்து மீள்விக்கப்பட்டது