பக்கம்:நாவுக்கரசர்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i82 நாவுக்கரசர்

நீராரும் சடைமுடியார் நிலவுதிரு

வலிவலமும் கினைந்து சென்று வாராரு முலைமங்கை உமைபங்கர்

கழல்பணிந்து மகிழ்ந்து பாடிக் காராரும் கறைக்கண்டர் கீழ்வேளுர்

கன்றாப்பூர் கலந்து பாடி ஆராத காதலினால் திருவாரூர்

தனில்மீண்டும் அணைந்தார் அன்றே.

என்ற பாடலில் வலிவலம், கீழ்வேளுர், கன்றாப்பூர் ஆகிய தலங்களைப் பணிந்து இறைஞ்ச நினைப்பதைக் காட்டுவார் சேக்கிழார் பெருமான்.

திருவாரூரிலிந்ருது திருநாவுக்கரசர் முதலில் வலிவலம்10 வந்து சேர்கின்றார். “நல்லான் காண்’ (8.48) என்ற திருத் தாண்டகப் பதிகத்தால் வலிவலத் தீசனை வழிபடுகின்றார்.

ஏயவன் காண்; எல்லார்க்கும் இயல்பா னான்காண்; இன்பங்காண்; துன்பங்கள் இல்லா தான்காண்; தாயவன்காண்; உலகுக்கோர் தன்னொப் பில்லாத்

தத்துவன்காண்: உத்தமன்காண்; தானே எங்கும் ஆயவன் காண்: அண்டத்துக் கப்பா லான்காண்;

அகங்குழைந்து மெய்வருந்தி அழுவார் தங்கள் வாயவன்காண்;. வானவர்கள் வணங்கி ஏத்தும்

வலிவலத் தான்காண்: அவனென் மனத்துளானே. (3)

என்பது இப்பதிகத்தின் மூன்றாவது தாண்டகம்.

15. பெ.பு. திருநாவுக்.228

18. வலிவலம் : மயிலாடுதுறை - காரைக்குடி இருப் பூர்தி வழியில் ஜாவூர்ரோட் என்ற : (திருவாரூர் அருகில் உள்ளது) 5, கல் தொலைவிலுள்ளது. இது கட்டுமலைக் கோயில். சுற்றிலும் அகழ். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/175&oldid=634170" இலிருந்து மீள்விக்கப்பட்டது