பக்கம்:நாவுக்கரசர்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் - (3) 133

வலிவலத்தானிடம் விடைபெற்றுக் கொண்டு கீழ்வேளு ருக்கு வருகின்றார். ஆளான அடியவர்க்கு (6. 67) என்ற முதற்குறிப்புடைய செந்தமிழ் மாலையைப் பாடிக் கீழ்வேளுர் ஆளும் கோவைப் போற்றி வணங்குகின்றார். இத்தாண்டகப் பதிகத்தில்,

மாண்டா ரெலும்பணிந்த வாழ்க்கை யானை

மயானத்திற் கூத்தனை வாளரவோ டென்பு பூண்டானைப் புறங்காட்டி லாடலானை

போகாதென்னுள் புகுந்துஇடம் கொண்டு என்னை ஆண்டானை அறிவரிய சிந்தை யானை

அசங்கையனை அமரர்கள்தம் சங்கை யெல்லாம் கீண்டானைக் கீழ்வேளுர் ஆளும் கோவைக் கேடிலியை நாடுமவர் கேடி லாரே. (9) என்பது ஒன்பதாவது தாண்டகம்.

கீழ்வேளுர்க் கேடிலியப்பனிடம் விடைபெற்றுக் கொண்டு கன்றாப்பூர் என்ற திருத்தலத்திற்கு வருகின்றார் அப்பர் பெருமான். ‘மாதினையோர் (6.61) என்று தொடங்கும் திருத்தாண்டகச் செந்தமிழ் மாலையைச் சூட்டி மகிழ்கின்றார். இதில்,

ஐயினால் மிடரடைப்புண் டாக்கை விட்டு ஆவியார் போவதுமே அகத்தார் கூடி மையினார்க் கண்ணெழுதி மாலை சூட்டி

மயானத்தி லிடுவதன்முன் மதியஞ் சூடும்

17. கீழ்வேளுர் (கீவளூர்), தஞ்சாவூர்.நாகூர் இருப்பூர் திப் பாதையில் கீவளூர் நிலையத்திலிருந்து ; கல் தொலை விலுள்ளது. முருகன் பூசித்த தலங்களுள் ஒன்று.

18. கன்றாப்பூர் (கோயில் கன்றாப்பூர்): மயிலாடு துறை-காரைக்குடி இருப்பூர்தி வழியில் மாவூர் ரோட் என்ற நிலையத்திலிருந்து 5, கல் தொலைவிலுள்ளது. கன்றுக்குட்டியைக் கட்டி வைக்கும் தறியிலிருந்து இறைவன் வழிபாட்ட்ை ஏற்றருளினான். கன்றாப்பூர் நடுதறியைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/176&oldid=634171" இலிருந்து மீள்விக்கப்பட்டது