பக்கம்:நாவுக்கரசர்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 நர்வுக்கரசர்

ஐயனார்க் காளாகி அன்பு மிக்கு

அகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதங்

கையினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே

கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே. (7)

என்பது திருத்தாண்டக வாடா நறுமலர். இப்பதிகத்தில் ஒன்பது திருப்பாடல்களே உள்ளன. ஒவ்வொரு பாடலும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே என்று இறுகின்றது. கன்றாப்பூர் நடுதறி என் பது இறைவனின் திருப்பெயர்.

இங்ஙனம் இத்திருத்தலங்களையெல்லாம் சென்று சேவித்தமையைச் சேக்கிழார் பெருமான்,

ரோரும் சடைமுடியார் கிலவுதிரு

வலிவலமும் கினைந்து சென்று வாராரு முலைமங்கை உமையங்கர்

கழல்பணிந்து மகிழ்ந்து பாடிக் காராரும் கரைகண்டர் கீழ்வேளுர் கன்றாப்பூர் கலந்து பாடி ஆராத காதலினால் திருவாரூர்

தனில்மீண்டும் அணைந்தார் அன்றே.19

என்ற திருப்பாடலால் குறிப்பிடுவர். இவர் திருவாரூர் திரும்பும்போது திருவாதிரைத் திருநாள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்த விழாவில் விதிவிடங்கப் பெரு மானின் திருவுலாவைக் கண்டு அடியார்களுடன் வணங்கி மகிழ்ந்திருக்கின்றார்!

காணலாமே” என வருதல் காண்க ப்பர் ெ * ... & மட்டிலுமே பாடியுள்ளார். அ பருமான்

19. பெ. பு: திருநாவுக். 228

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/177&oldid=634172" இலிருந்து மீள்விக்கப்பட்டது