பக்கம்:நாவுக்கரசர்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ்நாட்டுத் திருத்தலப் பயணம் - (3) 13.5

சில நாட்கள் திருவாரூரில் த்ங்கித் திருப்பயற்றுர்’ என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். உரித்திட்டார் (4.32) என்ற முதற் குறிப்புடைய திருநேரிச்ைச் செந்தமிழ் மாலை யில் தலத்து ஈசனை வழிபடுகின்றார்.

தந்தையாய்த் தாயு மாகித்

தரணியாய்த் தரணி யுள்ளார்க் கெங்தையும் என்ன நின்ற

ஏழுல குடனு மாகி எந்தைஎம் பிரானே என்றென்

றுள்குவார் உள்ளத்தென்றும் சிந்தையும் சிவமும் ஆவார்

திருப்பயற் றுணர னாரே (8) என்பது எட்டாவது டாமலர். பாடல்கள் யாவும் பக்தி உணர்ச்சியை எழுப்புபவை.

திருப்பயற்றுாரனாரிடம் விடை பெற்றுக்கொண்டு திருப்பள்ளியின் முக்கூடல்’ என்ற திருத்தலத்திற்கு வரு கின்றார். ஆராத இன்னமுதை (6.69) என்ற செந்தமிழ்த் திருத்தாண்டக மாலையால் தலத்துப் பெருமானை வழி படுகின்றார்.

அடைந்தார்தம் பாவங்கள் அல்லல் நோய்கள்

அருவினைகள் கல்குரவு செல்லா வண்ணங்

கடிந்தானைக் கார்முகில்போல் கண்டத்தானைக் கடுஞ்சினத்தோன் தன்னுடலை நேமி யாலே

20. பயற்றுர் (திருப்பயற்றங்குடி) மாயூரம்-காரைக் குடி இருப்பூர்தி வழியில் திருவாரூர்க் க்ருகிலுள்ள விற்குடி என்ற நிலையத்திலிருந்து 4 கல் தொலைவு.

21. பள்ளியின் முக்கூடல் (திருப்புள்ளி முக்கூடல், அரிக் கரையான்பள்ளி): விற்குடி என்ற இருப்பூர்தி நிலையத்தி லிருந்து 1: கல் தொலைவிலுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/178&oldid=634173" இலிருந்து மீள்விக்கப்பட்டது