பக்கம்:நாவுக்கரசர்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 நாவுக்கரசர்

தடிந்தானைத் தன்னொப்பா ரில்லா தானைத்

தத்துவனை உத்தமனை நினைவார் கெஞ்சில் படிந்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்

பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. (5) என்பது தமிழ் மணக்கும் ஐம்பதாவது வாடாத நறுமலர். இப்பதிகத்திலுள்ள பாடல்கள் யாவும் உள்ளத்தை உருக்கிப் பக்தியின் கொடுமுடிக்கு இட்டுச் செல்பவை. இந்த இரண்டு தலங்களையும் திருவாரூரில் இருந்தபோது வழிபட் டிருக்கலாம். இவற்றை வழிபட்ட நாள்பற்றி எந்தவிதக் குறிப்புகளும் கிடைக்கவில்லை. -

இங்ஙனம் திருவாரூரிலிருந்து சில தலங்களைச் சேவித்து வரும் நாட்களில் திருப்புகலூர்ப் பெருமானைச் சேவிக்க வேண்டும் என்ற எண்ணம் அப்பர் பெருமானின் திருவுள்ளத்தில் முகிழ்க்கின்றது. இதனைச் சேக்கிழார் பெருமான்,

மேவுதிரு வாதிரைநாள் வீதிவிடங் கப்பெருமான் பவனி தன்னில் தேவருடன் முனிவர்கள்முன் சேவிக்கும் அடியார்கள் உடன்சே வித்து மூவுலகும் களிகூர வரும்பெருமை

முறையெல்லாம் கண்டு போற்றி காவினுக்குத் தனியீசர் நயக்கும்நாள்

நம்பர்திரு வருளி னாலே. திருப்புகலூர் அமர்ந்தருளும் சிவபெருமான்

சேவடிகள் கும்பிட் டேத்தும் விருப்புடைய உள்ளத்து மேவிஎழும்

காதல்புரி வேட்கை கூர ஒருப்படுவார் திருவாரூர் ஒருவாறு

தொழுது அகன்று அங்கு உள்ளம் வைத்துப் பொருப்பரையன் மடப்பாவை இடப்பாகர்

பதிபிறவும் பணிந்து போந்தார்.22 22. பெ, பு. திருநாவுக்.229, 230

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/179&oldid=634174" இலிருந்து மீள்விக்கப்பட்டது