பக்கம்:நாவுக்கரசர்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் , (3) 137

இங்குப் பிறபதிகள்’ என்பதற்குத் திருப்பயற்றுார், திருப் பள்ளியின் முக்கூடல், திருவிற்குடி, திருப்பனையூர் முதலிய வையாகக் கொள்ளலாம். திருவிற்குடி. திருப்பனையூர் தலங்கட்குப் பதிகங்கள் இல்லை.

சம்பந்தர் சந்திப்பு ; திருவாரூர்ப் பெருமானை வணங்கி அவரிடம் விடைபெற்றுக்கொண்டு திருப்புகலூரை அடை கின்றார். அப்போது அங்கு முருகநாயனார்.24 திருமடத் தில் பல திருத்தலங்களையும் சேவித்த சம்பந்தர் பெருமான் எழுந்தருளியிருக்கின்றார். நாவுக்கரசர் வருகையைக் கேள்வியுற்ற காழிப்பிள்ளையும் அடியார்களுடன் எதிர் கொண்டு வரவேற்கின்றார். இருவரும் ஒருவரையொருவர் வணங்கி மகிழ்கின்றனர். இச் சந்திப்பைச் சேக்கிழார் பெருமான்,

இரண்டுகில வின்கடல்கள் ஒன்றாகி

அணைந்தனபோல் இசைந்த அன்றே.* என்று கூறி மகிழ்வர். ஆளுடைய பிள்ளையார் நாவுக் கரசரை நோக்கி, அப்பரே, நீவீர் திருவாரூரில் இருந்த

23. புகலூர் (திருப்புகலூர்): நன்னிலத்திலிருந்து 4 கல் தொலைவு. ந்ன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்தில்செல்லலாம். திருக்கோயிலைச் சுற்றி நாற்புறமும் திருக்குளம் அகழ் போலுள்ளது.கோயிலுக்குப்போக மட்டும் ஒரு வழியுள்ளது. இறைவன் சற்றுச் சாய்ந்துள்ளபடியால் கோணப்பிரான் என்று பாசுரம் (அப்பர் 4. 105:10) கூறும். முருகநாயனார் நாடோறும் பூத் தொடுத்து இறைவனை அலங்கரித்துத் தொண்டாற்றியதைப் பாசுரம் (சம்பந்தர் 2.92:5) கூறும். சுந்தரர் செங்கல்லைத் தலையணையாக வைத்து உறங்கும்போது அதைப் பொன்னாக்கி அவருக் களித்த அற்புதத் தலம் இது. அப்பர் பெருமான் முக்தி யடைந்த திருத்தலம். (. சேவித்தபோது அடியேன் இத்தலத்தையும் சேவித்தேன்.)

24. அறுபத்து மூவரில் ஒருவர்.

25. பெ. பு. திருநாவுக் 233,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/180&oldid=634176" இலிருந்து மீள்விக்கப்பட்டது