பக்கம்:நாவுக்கரசர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xv

18. ஞாலமெலாம் உய்யவரும்

நம்பியா ரூரரெனும்

ஆலால சுந்தரனார்

வரலாறும் அம்மைமுலைப்

பாலார்ந்த பிள்ளையார்

தேவாரப் பாநலமும்

மேலாய வாசகத்தேன்

சுவைநலமும் விரித்துரைத்தான்.

19. பெருமை சிறுமை கருதாது

பேரன் புடனே யாவரொடும் நெருங்கிப் பழகும் நீர்மையினான்

நின்ற சொல்லும் நேர்மையினான் கருமை விரவா நெஞ்சத்தான்

கற்றோர் தமக்கே தன்பணியை உரிமை செய்யும் உவப்புடையான்

உயிரோ ரன்ன கேண்மையினான்.

20. அயரா முயற்சி யாலறிவால்

வறுமை அகற்றும் ஆற்றலான்

செயிர்தீர் கட்பால் அன்பரொடு

சேர்ந்து பழகும் தெளிவுடையான்

மயர்வில் மனத்தான் மதிநலத்தால்

மக்கள் சுற்றம் மகிழ்கூரத்

துயர்தீர்ந் துலகம் வாழச்செய்

துயோன் நேயம் மிக்குடையான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/18&oldid=634175" இலிருந்து மீள்விக்கப்பட்டது