பக்கம்:நாவுக்கரசர்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் - (3) 141

செங்காட்டங்குடிச் செம்மேனி எம்மானிடம் விடை பெற்றுக்கொண்டு திருநள்ளாறு: வருகின்றார் திருநாவுக் கரசர், இரண்டு திருப்பதிகங்களால் வழிபடுகின்றார். :உள்ளாறாத’ (5.68) என்ற திருக் குறுந்தொகைப் பதிகத் தில்,

வஞ்ச நஞ்சிற் பொலிகின்ற கண்டத்தர்

விஞ்செயிற் செல்வப் பாவைக்கு வேந்தனார்

வஞ்ச நெஞ்சத் தவர்க்கு வழிகொடார்

கஞ்ச நெஞ்சர்க் கருளுகள் ளாறரே. (7) என்பது ஏழாவது திருக் குறுந்தொகை. ‘ஆதிக் கண் கான் முகத்தில்’ (6.20) என்று தொடங்கும் திருத்தாண்டகச் செந்தமிழ் மாலையில்,

28. நள்ளாறு (திருநள்ளாறு): பேரளம்.காரைக்கால் இருப்பூர்தி வழியில் திருநள்ளாறு என்ற நிலையத்திலிருந்து ஆ, கல் தொலைவு. சப்தவிடங்கங்களுள் இங்கு நகவிடங்கர் உன்மத்த நடனம். மதுரையில் சம்பந்தப் பெருமான் அனல் வாதம் செய்தபோது தமது தேவார ஏடுகளில் ஒன்றை எடுத்து அனலில் இடும்போது இத்தலப் பதிகம் விரைந்த ஏடு கிடைத்தது. அதனால் வாதத்தில் இந்த ஏடு எரியாமல் பச்சென்றிருந்தபடியால் இப்பதிகம் (சம்பந்தர் 1.49). :போகமார்த்த பூண்முலையாள்’ என்று தொடங்குவது. :பச்சைப்பதிகம்’ எனப் பெயர் பெற்றது. நளன் பூசித்துக் கவி நீங்கப் பெற்ற தலம். கோயிலுக்குப் போகும் வழியில் உட்பகுதியில் ஒரு புறம் சனீஸ்வரன் உருவம் உள்ளது. 12 இராசிகளுள் ஒன்றைவிட்டு மற்றொன்றிற்கு முன்னாகவோ அல்லது வக்ரமாகவோ (பின்னாகவோ) பெயர்வது சனி பெயர்ச்சியாகும். இச் சனிப்பெயர்ச்சி விழா ஒவ்வொன்றும் இத்தலத்தில் மிகச் சிறப்பாக நடைபெறும். சனிபகவான் தங்கக் காக்கை வாகனத்தில் வீதி வலம் வருதல் கண் கொள்ளாக் காட்சியாகும். 1976இல் திருப்பதியில் இருந்த போது ஒரு முறையும், 1985 பிப்ரவரியில் காரைக்காலில் நடைபெற்ற தமிழாசிரியர் பயிற்சி முகாயில் கலந்து கொண்டபோது மீண்டும் ஒரு முறையும் சனிபகவானை வழிபட்டதும்,இரண்டாம் முறையில் ஒதுவாரைக் கொண்டு திருக்கோயில் வலம் வந்து தரிசனம் செய்ததும் இன்றும் (1986) என் மனத்தில் பசுமையாக உள்ளது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/184&oldid=634180" இலிருந்து மீள்விக்கப்பட்டது