பக்கம்:நாவுக்கரசர்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 நாவுக்கரசர்

குலங்கெடுத்துக் கோள்நீக்க வல்லான் தன்னைக்

குலவரையின் மடப்பாவை இடப்பா லானை மலங்கெடுத்து மாதீர்த்தம் ஆட்டிக் கொண்ட

மறையவனைப் பிறைதவழ்செஞ் சடையி னானைச் சலங்கெடுத்துத் தயாமூல தன்ம மென்னும்

தத்துவத்தின் வழிகின்று தாழ்ந்தோர்க் கெல்லாம் நலங்கொடுக்கும் நம்பியை கள்ளாற் றானை

நானடியேன் கிணைக்கப்பெற் றுய்ந்த வாறே. (6) என்பது இச் செந்தமிழ் மாலையில் ஆறாவது வாடாத நறுமலர்.

நள்ளாற்று நாயகனிடம் விடை பெற்றுக்கொண்டு சாத்த மங்கை?? என்னும் திருத்தலத்திற்கு வருகின்றார், சாத்தமங்கலத்து ஈசனை வழிபடுகின்றார்(பதிகம் இல்லை). சாத்த மங்கலத்தினின்றும் மருகல் என்ற திருத்தலத்துக்கு எழுந்தருள்கின்றார். பெருகலாங் தவம்’ (5.88) என்னும் திருக்குறுந்தொகைப் பதிகத்தில்,

ஒது பைங்கிளிக் கொண்பா லமுதுாட்டிப் பாது காத்துப் பலபல கற்பித்து மாது தான்மரு கற்பெரு மானுக்குத் தூது சொல்ல விடத்தான் தொடங்குமே. (4) என்பது நான்காவது திருக்குறுந்தொகை. இப் பதிகத்தில் பாடல் 4 முதல் 9 முடிய அகப் பொருள் துறையமைந்த தாய்ப் பாசுரங்களாக அமைந்துள்ளன.

29. சாத்தமங்கை (சீயாத்தமங்கை). நன்னிலத்தி லிருந்து 7 கல் தொலைவு. பேருந்து வழியில் திருப்புகலூர் உள்ளது. திருநீலநக்கநாயனார் தொண்டு புரிந்த தல்ம், சம்பந்தர் தேவாரம் பெற்றது.

30. மருகல் (திருமருகல்). நன்னிலத்திலிருந்து 7 கல் தொலைவு, நஞ்சு தீண்டிய செட்டிப் பிள்ளையை உயிர்ப் பித்து, அவனுடன் வந்த பெண்ணை அவனுக்குத் திருஞான சம்பந்தர் திருமணம் செய்வித்த அற்புதத் தலம் (சம்பந்தர் 2.18 காண்க). -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/185&oldid=634181" இலிருந்து மீள்விக்கப்பட்டது