பக்கம்:நாவுக்கரசர்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாரூர் நிகழ்ச்சிகள் 145

பவனி வீதி விடங்கன் (5.7:8) என்று பாசுரம் கூறும், சிதம்பரத்தில் படிகலிங்க பூசை நடப்பது போலவே உச்சிக் காலத்தில் ஏழு விடங்கங்களிலும் நடைபெறுகின்றது. திரு மூலட்டானத்தின் பெயர் பூங்கோயில் என்பது (4.19:5). ஆரூர் கோயில் 5 வேலிப் பரப்புள்ளது (4.53:7)

தலம் : மூர்த்தியின் சிறப்புக்கு ஒத்த சிறப்புடையது. சோழ மன்னர்கள் முடிசூட்டு விழாக் கொண்டாடிய 5 நகரங்களுள் ஒன்று. மனுநீதிச் சோழன் பெயர் அன்றும் இன்றும் என்றும் நிலவுவதால் திக்கெலாம் நிறைந்த புகழ்த் திருவாரூர் (6.30:2); சிவபெருமானும் எமதர்மனுமே பசுவாகவும் கன்றாகவும் வந்ததாக வரலாறு. பிறந்தாலே முத்திதரும் பெரும்பதி. ஆரூரிற் பிறந்தார் எல்லாம் சிவ சாரூப்ய இலட்சணம் பொருந்திய சிவகணங்கள் என்று நமி நந்தியடிகட்கு ஆரூர்ப் பெருமான் கண்கூடாகக் காம் டினர்.2 திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் (6.39:19) என்பர் தம்பிரான் தோழர். நாளும் வானோர் சிறப்போடு பூசிக்கும் திருவாரூர் (6.30:4). இத்தலப் பெயரையே தேவாரம் அருளிய மூவர் முதலிகளும் அநுபவித்தனர்.

தீர்த்தம் : மூர்த்தி, தலச் சிறப்புகள் போலவே தீர்த்தச் சிறப்பும் பெற்றுள்ளது. கமலாலயம் என்ற திருக் குளம் திருக்கோயிலை யொத்து 5 வேலி அளவுள்ளது. இக் குளத்து நீர்கொண்டே நமிநந்தியடிகள் திருவிளக்கேற் றினர்.8 (4.102:2). பிறவிக்குருடராகிய நமிநந்தியடிகள் இத் திருக்குளத்தின் மேற்குப் புறத்தை அகழ்ந்து விரிவாக்கும் போது, தடை செய்த சமணர்களைக் குருடர்களாக்கி வென்று தாம் பார்வை பெற்று நாட்டம் மிகு தண்டி” அடிகளாயினர். பெருமான் பங்குனி உத்தரப்பெருவிழாவின்

2. பெ. பு. நமிநந்தி-27 3. டிெ. டிெ. 18, 14

நா.வ-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/188&oldid=634184" இலிருந்து மீள்விக்கப்பட்டது