பக்கம்:நாவுக்கரசர்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 ந்ாவுக்கரசர்

இறுதியில் உருத்திர பாத தீர்த்தம்'கொடுத்தருள்வதும் இத் திருக்குளத்தில் நிகழ்வது. இவ்வாறு மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறந்திருப்பதனால் அமரர் நாடா ளாதே ஆரூர் ஆண்ட அயிராவணமே (6.25,1) என்று வாயாரப் புகழ்வர் அப்பர் பெருமான். -

மூன்றாவது சுற்றுச் சோழ நாட்டுத் திருத்தலப் பய ணத்தை நிறைவு செய்துகொண்டு திருவாரூர் வருகின்றார் அப்பர் பெருமான். சமணர்கள் செய்த வஞ்சனைகளை யெல்லாம் கடந்து கல்லையே புணையாகக் கொண்டு கடல் கடந்தேறிய திருநாவுக்கரசர் திருவாரூர் வருவதைக் கேள்வியுற்ற அளவில்லாத அடியார்கள் அவ்வூரின் வெளி மதிலை அடைந்து அவரை எதிர்கொண்டு வரவேற்கின் றனர். பற்றுக்கோடு ஒன்றும் இல்லாத கொடியவர்களான :சமணர்களிடத்தே பொருந்தியிருந்ததனால் ஏற்பட்ட சூலை நோயினால் அவர்களைவிட்டு நீங்கிய எளியேனால் பெறத்தக்கதோ புற்றிடங் கொண்ட பெருமானுடைய அடியார்கட்குத் தொண்டு செய்யும் பெரும் பேறாகிய இப்புண்ணியம்?’ என்று கூறித் தான்’ எனும் உணர்வற்ற நிலையில் குலம்பலபாவரு’ (4.101) என்ற திருவிருத்தப் பதிகத்தைப் பாடிக்கொண்டு திருவாரூர்த் திருவீதியை அடைகின்றார். -

புண்ணிய சாத்திரப் பேய்கள்

பறிதலைக் குண்டரைவிட்(டு) எண்ணில் புகழீசன் றன்னருள் -

பெற்றேற்கும் உண்டுகொலோ திண்ணிய மாமதில் ஆரூர்த்

திருமூலட் டானன்னங்கள் புண்ணியன் தன்னடித் தொண்டர்க்குத்

தொண்டராம் புண்ணியமே. (7) என்பது இப் பதிகத்தின் ஏழாவது பாடல். இப்பதிகத்தின் எல்லாப் பாடல்களுமே உண்டுகொலோ......மூலட்டானப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/189&oldid=634185" இலிருந்து மீள்விக்கப்பட்டது