பக்கம்:நாவுக்கரசர்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாரூர் நிகழ்ச்சிகள் 147

பெருமான் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.” என்று முடிவது அப்பர் பெருமான் உள் குழைந்து பாடு வதைக் காட்டுகின்றது.

அடியார்களுடன் திருக்கோயிலின் தோரண வாயிலை அடைந்து தேவாசிரிய மண்டபத்தைக் இறைஞ்சுகின்றார். பின்னர், திருமாளிகை வாயிலினுட் புகுந்து புற்றிடங் கொண்ட பெருமான் திருமுன்னர் நின்று பணிந்து கற்ற வர்கள் உண்ணும் (6.32) என்ற முதற் குறிப்புடைய செந். தமிழ்த் திருத்தாண்டக மாலையால் சேவிக்கின்றார்.

மலையான் மடங்தை மணாளா போற்றி

மழவிடையாய் கின் பாதம் போற்றி போற்றி நிலையாக என்னெஞ்சில் கின்றாய் போற்றி

நெற்றிமேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி இலையாய மூவிலைவே லேந்தீ போற்றி

ஏழ்கடலும் ஏம்பொழிலும் ஆனாய் போற்றி சிலையாலன் றெயிலெரித்த சிவனே போற்றி

திருமூலட் டானனே போற்றி போற்றி. (3) என்பது இச்செந்தமிழ் மாலையில் மூன்றாவது வாடா நறு மலர். எல்லாப் பாடல்களையும் நெஞ்சுருகப் பாடினால் அப்பர் பெருமானின் உணர்ச்சியைப் பெற முயலலாம். இப் பதிகப் பாடல்கள் யாவும் போற்றி போற்றி என்று முடிவதால் இது போற்றித் திருத்தாண்டகம்’ என்ற பெயர் பெறுகின்றது.

அடுத்து காண்டலே கருத்தாய் (4.2.0) என்ற கலைப் பதிகம் பாடிப் பரவுகின்றார்.

பிறத்தலும் பிறந்தாற் பிணிப்பட

வாய்த்தசைக் துடலம் புகுந்துகின்

4. கீழைக்கோபுரவாயிலுக்குள் நு. ைழ ந் த வுடன் காணப் பெறும் 1000 கால் மண்டபமே இத் தேவாசிரிய மண்டபம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/190&oldid=634187" இலிருந்து மீள்விக்கப்பட்டது