பக்கம்:நாவுக்கரசர்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 நாவுக்கரசர்

றிறக்குமா றுளதே இழிந்தேன் பிறப்பினைநான்

அறத்தையே புரிந்த மனத்தனாய்

ஆர்வச்செற் றக்குரோத நீக்கியுன்

திறத்தனா யொழித்தேன் திருவாரூ ரம்மானே. (8)

என்பது இப்பதிகத்தின் எட்டாவது திருப்பாடல்.

பின்னர் திருக்கோவிலை வலம் வந்து புறம்போந்து தேவாசிரிய மண்டபத்தை அடைகின்றார். அடைந்தவர், மெய்யெலாம்’ (4.5) என்ற முதற் குறிப்பையுடைய செந் தமிழ்ப் பதிகம் பாடித் தம் செயலற்ற நிலையைப் புலப் படுத்துகின்றார். இதில்,

என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட் டென்னையோர் உருவமாக்கி இன்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த்திட்

டென்னுள்ளம் கோயிலாக்கி . . . அன்பிருத்தி அடியேனைக் கூழாட்கொண் டருள்செய்த ஆரூரர்தம் * . - முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக் காக்கையின் போனவாறே. (2)

என்பது மூன்றாம் பாடல். இப்பதிகத்தி ன் ஒவ்வொரு பாட வின் இறுதியிலும் ஒரு பழமொழி அமைந்திருப்பதால் இது “பழமொழிப் பதிகம் என்ற பெயரைப் பெறுகின்றது.

நாவுக்கரசர் பெருமான் ஆரூர்ப் பெருமானைக் காலந் தோறும் கும்பிட்டுத் திருத்தொண்டு புரியும் நிலையைச் சேக்கிழார் பெருமான்,

மார்பாரப் பொழி கண்ணிர் மழைவாருங் - திருவடியும் மதுர வாக்கில்

சேர்வாகுக் திருவாயில் தீந்தமிழின்

மாலைகளும் செம்பொற் றாளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/191&oldid=634188" இலிருந்து மீள்விக்கப்பட்டது