பக்கம்:நாவுக்கரசர்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாரூர் நிகழ்ச்சிகள் 49

சார் வான திருமணமும் உழவாரத் தனிப்படையும் தாமு மாகிப்.

பார்வாழத் திருவிதிப் பணி செய்து

பணிந்தேத்திப் பரவிச் செல்வார்.

என்று விவரிப்பார். மழைபோலக் கண்ணிர் வழியும் திரு வடிவமும், இனிய தமிழ்ப் பதிகங்கள் பிறக்கும் திருவாயும், இறைவன் திருவடிகளையே சார்ந்திருக்கும் மனமும், உழவாரப் படையைத் தாங்கிய வண்ணமும் கொண்ட நிலையில், அ ப் ப ர் பெ ரு மா ன் திருவீதிப் பணி களைச் செய்கின்றார். ஒவ்வொரு காலமும் புற்றிடம் கொண்ட பெருமானைக் கும்பிட்டு பாடிளம் பூதத்தினானும்’ (4.4) என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகம் பாடி மனங் கரைந்து உருகுகின்றார்.

ஆயிரங் தாமரை போலும்

ஆயிரம் சேவடி யானும் ஆயிரம் பொன்வரை போலும்

ஆயிரம் தோளுடை யானும் ஆயிரம் ஞாயிறு போலும்

ஆயிர நீண்முடி யானும் ஆயிரம் பேருகங் தானும்

ஆரூ ரமர்ந்தஅம் மானே. (8)

என்பது இதன் எட்டாவது பாடல், பாடல்கள் யாவும் படித்து அநுபவிக்கத் தக்கவை. இவற்றில் இறைவனின் தன்மைகள் கூறப் பெறுகின்றன.

அடுத்து, ‘வேம்பினை (4.102) என்ற திருவிருத்தச் செந்தமிழ்ப் பதிகம் பாடிப் பூங்கோயிலமர்ந்துள்ள பெரு மானைப் போற்றுகின்றார். இதில், !

5. பெ. பு: திருநாவுக். 225 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/192&oldid=634189" இலிருந்து மீள்விக்கப்பட்டது