பக்கம்:நாவுக்கரசர்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 நாவுக்கரசர்

ஆராய்க் தடித்தொண்டர் ஆணிப்பொன்

ஆரூர் அகத்தடக்கிப்

பாரூர் பரிப்பத்தம் பங்குனி

உத்திரம் பாற்படுத்தான்

ஆரூர் நறுமலர் நாதன்

அடித்தொண்டன் நம்பிநந்தி

நீரால் திருவிளக் கிட்டமை

னோ டறியுமன்றே. (2)

என்பது இரண்டாவது திருவிருத்தம். இதில், திருவாரூர்த் திருக்கோயிலில் நீரால் திருவிளக்கெரித்தும் இறைவனுக்குப் பங்குனி உத்திரப் பெருவிழாவைச் சிறப்புற நடைபெறச் செய்தும் திருத்தொண்டு புரிந்த நான்மறைவல்ல அந்தண ராகிய நமிநந்தியடிகளைப் பாராட்டிப் போற்றுவதைக் கண்டு மகிழலாம். இப்பதிகத்தில் 7,8,9,10 ஆம் பாடல்கள் காணப்பெறவில்லை,

அடுத்து, ஆரூர் அரநெறித்” திருக்கோயில் பெருமானை வழிபடுகின்றார் இரண்டு திருப்பதிகங்களால். எத்தி புகினும் (4.17) என்ற திருப்பதிகத்தால் முதலில் போற்று கின்றார்.

முடிவண்ணம் வானமின் வண்ணந்தம் மார்பின் பொடிவண்ணம் தம்புக மூர்தியின் வண்ணம் படிவண்ணம் பாற்கடல் வண்ணம்செஞ் ஞாயி(று) அடிவண்ணம் ஆரூர் அரநெறி யார்க்கே. (9) என்பது இப்பதிகத்தின் ஒன்பதாம் பாடல். அடுத்து பொருக்கை மதக் (6.33) என்ற முதற் குறிப்பையுடைய செந்தமிழ் மாலையால் வழிபடுகின்றார்.

6. ரூர் அரநெறி : ஆரூர்க் கோயிலின் தெற்குப் 37* மேற்குச் சந்நிதித் தனிக்கோயிலாக உள்ளது. இக்கோயிலிலேயே நமிநந்தியடிகள் பல தொண்டுகள் புரிந்து நீரால் விளக்கேற்றியது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/193&oldid=634190" இலிருந்து மீள்விக்கப்பட்டது