பக்கம்:நாவுக்கரசர்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாரூர் நிகழ்ச்சிகள் 151

பொருளியல்கற் சொற்பதங்க ‘ளாயிண்ானைப் புகலூரும் புறம்பயமும் மேயான் தன்னை

மருளியலும் சிந்தையர்க்கு மருந்து தன்னை

மறைக்காடும் சாய்க்காடும் மன்னி னானை

இருளியல்கல் பொழிலாரூர் மூலட் டானத்

திணிதமரும் பெருமானை இமையோ ரேத்த

அருளியனை அரநெறியி லப்பன் தன்னை

அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்தவாறே. (7)

என்பது ஏழாவது தமிழ் மணம் கமழும் நறுமலர். இப்பதிகத் தின் ஒவ்வொரு பாடலும் அரநெறியிலப்பன் தன்னை அடைந்தடியேன்.அறுவினைநோய் அறுத்தவாறே என்று முடிகின்றது. பாடல்களைப் பன்முறை படித்து அநுப விக்கும் போது இந்த இறுதித் தொடர் நம்மைப் பக்தியின் கொடுமுடிக்கு இட்டுச் செல்வதை அறியலாம்.

மீண்டும் புற்றிடங்கொண்ட பெருமான் திருக்கோயி லுக்கே வருகின்றார். குலப்படையானை (4.19) என்ற திருப்பதிகம் பாடி மூலட்டான இறைவனைப் போற்று கின்றார்.

வஞ்சனையா ரார்பாடும் சாராத மைந்தனைக் துஞ்சிருளில் ஆடல் உகந்தானைத் தன்தொண்டர் கெஞ்சிருள் கூரும்பொழுது கிலாப் பாரித் தஞ்சுடராய் கின்றானை நான்கண்ட தாருரே. (8) என்பது எட்டாவது பாடல். அடுத்து படுகுழிப் பவ்வத்’ (4.52) என்ற முதற் குறிப்புடைய செந்தமிழ் திருநேரிசை மாலையால் வழிபடுகின்றார்.

உயிர்நிலை உடம்பே காலாம்

உள்ளமே தாழி யாகத், துயரமே ஏற்ற மாகத்

துன்பக்கோ லதனைப் பற்றிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/194&oldid=634191" இலிருந்து மீள்விக்கப்பட்டது