பக்கம்:நாவுக்கரசர்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாரூர் நிகழ்ச்சிகள் 153

வண்டு லாமலர் கொண்டு வளர்சடைக்(கு) இண்டை மாலை புனைந்தும் இராப்பகல் தொண்ட ராகித் தொடர்ந்து விடாதவர்க்(கு) அண்டம் ஆளவும் வைப்பர்ஆ ரூரரே. (3) என்பது மூன்றாம் பாடல். இப்பதிகத்தின் 7, 8 ஆகிய பாடல்கள் தாய்ப் பாசுரங்களாக அமைந்துள்ளன, இவை இரண்டும் வேறு பதிகத்தைச் சார்ந்தவையோ என்று ஐயப் படுபவர் சிவக் கவிமணி சி. கே. சுப்பிரமணிய முதலியார்.

அடுத்துவரும் எட்டுத் திருத்தாண்டகச் செந்தமிழ் மாலைகள் அற்புதமாகப் புனையப் பெற்றவை. இவற்றுள் கைம்மான’ (6,24) என்ற முதற் குறிப்புடைய திருத் தாண்டக மாலையில்,

மலைவளர்த்த மடமங்கை பாகத் தான்காண்;

மயானத் தான்காண்;மதியஞ்சூடி னான்காண்; இலைவளர்த்த மலர்க்கொன்றை மாலை யான்காண்;

இறையவன்காண்; எரிதிரைநீர் நஞ்சுண் டான்காண்; கொலைவளர்த்த மூவிலைய சூலத் தான்காண்;

கொடுங்குன்றன் காண்:கொல்லை யேற்றி * - TT656; நிலைவளர்த்த சரந்துரந்த திறத்தி னான்காண்;

திருவாரு ரான்காண்;என் சிந்தை யானே. (9) என்பது இப்பதிகத்தின் ஒன்பதாவது வாடா நறுமலர்’ தொடர்ந்து பாடல்களை இசையுடன் படிக்கும்போது காண்...காண்’ என்று திரும்பத் திரும்ப ஒலித்து, பக்தியின் கொடுமுடியை எட்டத் துணை செய்கின்றது.

‘உயிராவணம் (6.25) என்ற முதற் குறிப்பினையுடைய திருத்தாண்டக மாலையில்,

முன்னம் அவனுடைய காமம் கேட்டாள்

மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்; பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்;

பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/196&oldid=634193" இலிருந்து மீள்விக்கப்பட்டது