பக்கம்:நாவுக்கரசர்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 நிாவுக்கரசர்

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்;

அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்

தன்னை மறந்தாள் தன்னாமங் கெட்டாள்;

தலைப்பட்டாள் கங்கை தலைவன் தாளே. (7)

என்பது இப்பதிகத்திலுள்ள ஒரே ஒரு அகத்துறைப் பாடல், உள்ளத்தை உருக்கும் ஒப்பற்ற பாடல்: இது தாய்க் கூற் றாக உள்ளது. இது சைவ சித்தாந்தக் கருத்தை விளக்குவ தாக அமைந்துள்ளது. முதலில் தலைவி (சீவான்மா) தலைவனின் பெயர் கேட்கின்றாள்; பின் அவனது வண்ணம் கேட்கின்றாள்; அவனுடைய ஆரூர் கேட்கின்றாள்; அவ னிடத்தில் பித்தாகின்றாள்; உலகப் பற்றை விடுகின்றாள்; தன்னிலையை மறக்கின்றாள்; தன் பெயரையும் இழக்கின் றாள்; தலைவனுடைய தாளினைத் தலைப்படுகின்றாள். (பாசத்தை நீக்கிப் பதியை அடையும் உயிரின் தன்மை ஈண்டுக் கூறப்பெறுகின்றது). தனியாக ஓர் அகப்பாடல் எப்படி வந்து இப்பதிகத்திலேறியது என்பதை அறியக்கூட வில்லை. -

இதனை அடுத்து : பாதித்தன்’ (6.26) என்ற செந் தமிழ்த் திருத்தாண்டக மாலையால் வழிபடுகின்றார். இதில்,

மெய்ப்பால்வெண் ணிறணித்த மேனி யானை

வெண்பளிங்கி னுட்பதித்த சோதி யானை ஒப்பானை யொப்பில்லா வொருவன் தன்னை

உத்தமனை நித்திலத்தை உலக மெல்லாம் வைப்பானைக் களைவானை வருவிப் பானை

வல்வினையேன் மனத்தகத்தே மன்னி னானை அப்பாலைக் கப்பாலைக் கப்பா லானை

ஆரூரிற் கண்டடியேன் அயர்ந்த வாறே (4): என்பது நான்காம் பாடல். இப்பதிகத்தின் 7, 8, 9, 10ஆம் பாடல்கள் கிடைக்கப் பெறவில்லை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/197&oldid=634194" இலிருந்து மீள்விக்கப்பட்டது