பக்கம்:நாவுக்கரசர்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாரூர் நிகழ்ச்சிகள் j 5

இதனை அடுத்து வழிபடுவதற்காக அருளப் பெற்றது ‘ற்ேறினையும்’ (6:28) என்ற முதற்குறிப்புடைய பதிக மாகும். இதில், - .

காமனையும் கரியாகக் காய்ந்தார் போலும்

கடல்நஞ்ச முண்டிருந்த கண்டர் போலும் சோமனையும் செஞ்சடைமேல் வைத்தார் போலும்

சொல்லாகிச் சொற்பொருளாய் நின்றார் போலும் காமனையும் வேதத்தார் தாமே போலும்

கங்கையோர் பால்மகிழ்ந்த கம்பர் போலும் ஆமனையும் திருமுடியார் தாமே போலும்

அணியாரூர்த் திருமூலட் டான னாரே. (6)

என்பது ஆறாவது பாடல்: எல்லாப் பாடல்களும் படித்து இன்புறத் தக்கவை. திருமணியை (6.29) என்ற முதற் குறிப்புடைய தெய்வத் திருத்தாண்டக செந்தமிழ் மாலை யில்,

முந்திய வல்வினைகள் தீர்ப்பான் தன்னை மூவாத மேனிமுக் கண்ணி னானைச் சந்திரனும் வெங்கதிரு மாயி னானைச்

சங்கரனைச் சங்கக் குழையான் தன்னை மந்திரமும் மறைப்பொருளும் ஆனான் தன்னை

மறுமையும் இம்மையு மானான் தன்னை அந்திரனை ஆரூரி லம்மான் தன்னை

அறியா தடிநாயேன் அயர்ந்த வாறே. (4)

என்பது நான்காம் வாடா செந்தமிழ் நறுமணமலர். பொது வாகத் தாண்டகச் செய்யுட்கள் யாவுமே உள்ளத்தை உருக்குபவை.

“எம்பந்த வல்வினை நோய் (6.30) என்ற முதற் குறிப் புடைய திருத்தாண்டகச் செந்தமிழ் மாலையில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/198&oldid=634195" இலிருந்து மீள்விக்கப்பட்டது