பக்கம்:நாவுக்கரசர்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாரூர் நிகழ்ச்சிகள் i57

அடுத்து ஒருனாய் உலகேத்த’ (6.34) என்ற திருத் தாண்டகப் பதிகத்தால் ஆரூர்ப் பெருமானை நோக்கிச் செய்யும் வழிபாடு மிகவும் அற்புதமானது. ஒருவனாய் உலகேத்த கின்ற நாளோ

ஒருருவே மூவுருவும் ஆன நாளோ கருவனாய்க் காலனை முன் காய்ந்த நாளோ

காமனையும் கண்ணழலால் விழித்த நாளோ மருவனாய் மண்ணும் விண்ணும் தெரிந்த நாளோ

மான்மறிக்கை யேந்தியோர் மாதோர் பாகத் திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ

திருவாரூர்க் கோயிலாக் கொண்ட நாளே. (1) என்பது இப்பதிகத்தின் முதல் பாடல். எல்லாப் பாடல் களையும் படித்து நாவேந்தரின் இறையநுபவத்தைப் பெற முயல வெண்டும். பதிகம் இறைவனின் தொன்மையைக் கூறுவதாக அமைந்துள்ளது. , எம்பெருமான் திருவாரூர்க் கோயிலைக் கொண்டமை மாதோர் பாகம் கொள்ளும் முன்போ? பின்போ? முப்புரம் எரித்த முன்னோ? பின்னோ, தில்லை அம்பலத்து ஆடும் முன்போ? பின்போ? மதியைச் சூடும் முன்னோ? பின்னோ? ஆலின்கீழ் அறம் உரைப் பதற்கு முன்னோ? பின்னோ? சலந்தரனைக் கொல்லும் முன்போ? பின்போ? வேதத்தை விரிப்பதற்கு முன்போ? பின்போ? திசை எட்டும் தெரிப்பதற்கு முன்னோ? பின்னோ? தேசம் உம்மை அறிவதற்கு முன்னோ? பின்னோ?’ என்று வினவுவதாகப் பாசுரங்கள் அமைந்

துள்ளன. . . .

இங்ஙனம் திருவாரூரில் இறைவன்மீது பாமலைகள் சாத்திக் காலங்கழித்துக் கொண்டிருந்த நாட்களில்தான் திருப்புகலூர்ப் பெருமானை வழிபடவேண்டும் என்னும் எண்ணம் நாவேந்தரின் சிந்தையில் முகிழ்க்கின்றது. இதற்கு முன் வலிவலம் முதலான திருத்தலங்களை வழிபடு கின்றார். பின்னர்தான் திருப்புகலூர் வருகின்றார், சம்பந்தப் பெருமானின் சந்திப்பும் நேர்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/200&oldid=634198" இலிருந்து மீள்விக்கப்பட்டது