பக்கம்:நாவுக்கரசர்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காழிப் பிள்ளையாருடன் தல வழிபாடு 159

என்று கூறுவர். (இத்தலத்துக்கு அப்பர் பதிகம் இல்லை). இத்திருப்பதிப் பெருமானை வணங்கி விடைபெற்று திருக் கடலூர்’ என்னும் திருத்தலத்துக்கு வருகின்றனர். அப்பர் பெருமான் மூன்று பதிகங்களால் அமிர்தலிங்கத்தை வழிபடு கின்றார். ‘பொள்ளத்த காயமாய’ (4.31) என்ற முதற் குறிப்பையுடைய திருநேரிசைப் பதிகத்தில்,

பழியுடை யாக்கை தன்னில்

பாழுக்கே நீரி றைத்து வழியிடை வாழ மாட்டேன்

மாயமும் தெளிய கில்லேன் அழிவுடைத் தாய வாழ்க்கை

ஐவரால் அலைக்கப் பட்டுக் கழியிடைத் தோணி போன்றேன் கடலூர்வீ ரட்ட னாரே (6).

3. திருக்கடலூர் வீரட்டம் (திருக்கடையூர்): மாயூரம் -தரங்கம்பர்டி இருப்பூர்தி வழியிலுள்ள திருக்கடையூர் நிலையத்திலிருந்து ; கல் தொலைவு. மார்க்கண்டன் என்றும் பதினாறாக இருக்க வரம்பெற்ற அற்புதத்தலம். அமிர்த கடமே சிவலிங்கமாயிருத்தலின்அமிர்த கடேசுவரர் என்பது இறைவன் பெயர். குங்கிலியக்கலய நாயனாரும் காரிநாயனாரும் தொண்டு செய்து முத்தி பெற்ற தலம். ‘திருக்களிற்றுப் படியார்’ என்ற சித்தாந்த சாத்திரம் இயற்றிய உய்யவந்த தேவநாயனார் அவதரித்த தலம். அபிராமபட்டர் அபிராமி அந்தாதி பாடி அபிராமி அம்மை யின் அருளால் அமாவாசையன்று முழுமதியை ஆகாயத்தில் காட்டிய அற்புதம் நிகழ்ந்த தலம். சித்திரைப் பெருவிழா வில் 6 - ஆம் நாள் கால சம்கார உற்சவம் புகழ் பெற்றது. கார்த்திகை சோம வாரம்தோறும் 1008 சங்காபிடேகமும் புகழ்பெற்றது. அன்பர்கள் தமது 60-ஆம் ஆண்டு நிறைவை இத்தலத்தில் ஆயுள் ஒமம் முதலியன செய்து கொண் ட்ாடுவது வழக்கமாக இருந்து வருகின்றது. அட்டவீரட்ட னங்களுள் இத்தலமும் ஒன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/202&oldid=634200" இலிருந்து மீள்விக்கப்பட்டது