பக்கம்:நாவுக்கரசர்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i50 நாவுக்கரசர்

என்பது ஆறாவது திருநேரிசை. இப்பதிகத்திலுள்ள பாடல் கள் யாவும் உள்ளத்தை உருக்குபவை. மருள் துயர்திர: (4.107) என்ற திருவிருத்தப் பதிகத்தில்,

பதத்தெழு மந்திரம் அஞ்செழுத் தோதிப் பிரிவினொடும் இதத்தெழு மாணிதன் இன்னுயிர்

உண்ண வெகுண்டடர்த்த கதத்தெழு காலனைக் கண்குருதிப்

புனலா றொழுக உதைத்தெழு சேவடி யான்கட ஆருறை உத்தமனே. (2)

என்பது இரண்டாவது திருவிருத்தம். மார்க்கண்டன் உயிரைக் கவர வந்த காலனை அடர்த்து அந்தச் சிறுவ னுக்கு என்றும் பதினாறு’ என்ற சிரஞ்சீவித்துவத்தை அளித்த நிகழ்ச்சி பத்துத் திருவிருத்தத்திலும் குறிப்பிடப் பெற்றிருத்தலைக் கண்டு மகிழலாம். மலைக்கொளானை’ (5.87) என்ற குறுந்தொகைப் பதிகத்தில்,

ஞான மாகிய நன்குண ரானையார் ஊனை வேவ உருக்கிய வானையார் வேன லானை புரித்துமை யஞ்சவே கான லானைக் கண்டி கடவூரே. (3)

என்பது மூன்றாவது குறுந்தொகை. இப்பதிகத்தின் பாடல் 6 . இல் கடுத்த காலனைக் காய்ந்த’ என்ற தொடரால் மார்க்கண்டன் வரலாறு குறுப்பிடப்பெறுகின்றது. திருக் கடவூரில் இருந்தபொழுது இந்த இரு பெரு அடியார்களும் அடியார் குழுவுடன் குங்குலியக் கலயனார் திருமடத்தில் திருவமுது செய்கின்றனர்.4

4. பெ. பு. திருநாவுக், 247

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/203&oldid=634201" இலிருந்து மீள்விக்கப்பட்டது