பக்கம்:நாவுக்கரசர்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காழிப் பிள்ளையாருடன் தல வழிபாடு 163

மீயச்சூர் அப்பனிடம் விடைபெற்றுக்கொண்டு திருவீழி மிழலை வருகின்றனர். திருவிழிமிழலையிலுள்ள பெரு மக்கள் இருவருக்கும் பெரிய வரவேற்பு நல்க, இருவரும் விண்ணிழி விமானத்தில் வீற்றிருந்தருளும் பெருமானை வணங்கி மகிழ்கின்றனர். இதனைச் சேக்கிழார் பெருமான்,

வீழி மிழலை வந்தணைய

மேவு நாவுக் கரசினையும் காழி ஞானப் பிள்ளையையும்

கலந்த உள்ளக் காதலினால் ஆழி வலவன் அறியாத

அடியார் அடியார் அவர்களுடன் வாழி மறையோர் எதிர்கொண்டு

வணங்க வணங்கி உள்புக்கார்

மாட வீதி அலங்கரித்து

மறையோர் வாயின் மணிவிளக்கு பீடு கதலி தழைப்பூகம்

கிரைத்து கிறைபொற் குடமெடுத்துப

8. திருவிழிமிழலை- மயிலாடுதுறை - காரைக்குடி இருப்பூர்திப் ப்ாதையில் பூந்தோட்டம் என்ற நிலையத்தி லிருந்து 7 கல் தொலைவிலுள்ளது. சக்கராயுதம் பெறுவதற் காகத் திருமால் நாடோறும் 1000 தாமரை மலர்களால் இத்த்லத்து ஈசனைக் அருச்சித்து வர ஒருநாள் ஒரு மலர் குறைய, தன் கண்ணையே எடுத்து அருச்சனை முடித்ததை 1.64:8”என்ற பாசுரம் கூறும். திருமால் விண்ணிலிருந்து கொணர்ந்த விமானமே கோயிலாயிற்றென்பதை சம்பந்த ரின் பாசுரம் (3.119:7) கூறும். கருவறை இலிங்கமூர்த்தி யின் பின்புறம் பார்வதி . பரமேசுவரன் திருமணக்கோலம் உள்ளது. பஞ்சம் வந்தபோது அப்பருக்கும் சம்பந்தருக்கும் அடியார்க்கமுதளிப்பதற்காக இறைவன்_நாடோறும் காசு படி கொடுத்ததைப் பரசுரம் (சுந்தரர் தேவாரம் 7.88:8) கூறும். இக்காசுகளுள் அப்பருக்களித்த * }L#f மாறிற்று. சம்பந்தருக்களித்த காசு வாசியுள்ளதாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/206&oldid=634204" இலிருந்து மீள்விக்கப்பட்டது