பக்கம்:நாவுக்கரசர்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 நாவுக்கரசர்

பூடு பெருகும் வாகீசர்

பிள்ளை யாரும் தொண்டர்களும்

கூட மகிழ்ந்து விண்ணிழிந்த

கோயில் வாயில் சென்றணைந்தார். (9)

என்று காட்டுவர். இருவரும் திருக்கோயிலினுட் புகுந்து, வலம் வந்து, முன்றில் வணங்கி, முக்கட் செக்கர்ச் சடை மவுலி வென்றிவிடையார் சேவடிக் கீழ் விழுந்தார் எழுந்தார் விம்மினார் 19 நாவுக்கரசர் பெருமான் போரானை ஈருரிவைப் போர்வையானை’ (6.50) என்னும் முதற் குறிப்பையுடைய செந்தமிழ்த் தாண்டக மாலையைச் திருவிழிமிழலையானுக்குச் சாத்தி வணங்குகின்றார்.

தூயானைச் சுடர்பவளச் சோதி யானைத்

தோன்றிய எவ்வுயிர்க்கும் துணையாய் நின்ற தாயானைச் சக்கரமாற் கீந்தான் தன்னைச்

சங்கரனைச் சாந்தோக சாமம் ஒதும் வாயானை மந்திரிப்பார் மனத்து ளானை

வஞ்சனையல் அஞ்செழுத்தும் வழுத்து வார்க்குச் சேயானைத் திருவீழி மிழலை யானை

சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே...(4) என்பது நான்காவது திருத்தாண்டக வாடாமலர். செய்ய சடையார் தமைச் சேரார் தீங்கு நெறி சேர்கின்றார்: என்னும் கருத்தமையத் திருவீதி மிழலையானைச் சேராதார் தி நெறிக்கே சேர்கின்றாரே என ஒவ்வொரு தாண்டகமும் முடியும் வண்ணம் பாடியுள்ளதால் இந் தாண்டகம் உய்யும் கெறித்தாண்டகம்’ என்ற பெயர் பெறு கின்றது. அரசரும் பிள்ளையாரும் இருவேறு திருமடங்களில்

இருந்தது. சித்திரைப் பெருவிழாவில் 6-ஆம் நாள் காத்யாயனி திருமண உற்சவம் மிகவும் சிறப்புடையது.

9. பெ. பு: திருநாவுக். 250, 251 10. டிெ. டிெ - 252

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/207&oldid=634205" இலிருந்து மீள்விக்கப்பட்டது