பக்கம்:நாவுக்கரசர்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 நிாவுக்கரசர்

காழிப்பிள்ளையார் விழிமிழலைப் பெருமானை இறைஞ்சி வாசிதீரவே காசு நல்குவீர் (சம்பந்தர் 1.92) என வேண்டி வாசியில்லாக் காசு பெற்று உரிய காலத்தில் அடியார்களை உண்பிக்கின்றார். பின்னர் எங்கும் மழை பெய்து உணவுப் பொருள்கள் பெருகவே பஞ்சமும் நீங்கி விடுகின்றது.

நாவுக்கரசரின் செந்தமிழ் மால்ைகள் : திருவீழி மிழலை யில் இருவரும் தங்கியிருந்தபொழுது அப்பர் பெருமான் பல செந்தமிழ் மாலைகளால் விழிமிழலையானைப் போற்றிப் பரவுகின்றார். பூதத்தின் படையார்’ (4.64). என்று தொடங்கும் திருநேரிசைப் பதிகத்தில்,

நீற்றினை நிறையப் பூசி

கித்தல்ஆ யிரம்பூக் கொண்டு ஏற்றுழி யொருகா ளொன்று

குறையக்கண் நிறைய விட்ட ஆற்றலுக் காழி கல்கி

அவன் கொணர்ந் திழிச்சுங் கோயில் வீற்றிருந் தளிப்பர் விழி .

மிழலையுள் விகிர்த னாரே. (8) என்பது எட்டாவது பாடல்: வான் சொட்டச் சொட்ட’ (4.95) என்று தொடங்கும் திருவிருத்தச் செந்தமிழ் மாலை யில்,

தீத்தொழி லான்தலை தீயிலிட்டுச்

செய்தவேள்வி செற்றீர

பேய்த்தொழி லாட்டியைப் பெற்றுடையீர்

- பிடித்துத் திரியும்

வேய்த்தொழி லாளர் மிழலையுள்ளீர்

விக்கிஅஞ் செழுத்தும்

ஒத்தொழிந்தும்மை மறக்கினும்

என்னைக் குறிக்கொண்மினே. (4)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/209&oldid=634207" இலிருந்து மீள்விக்கப்பட்டது