பக்கம்:நாவுக்கரசர்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காழிப் பிள்ளையாருடன் தல வழிபாடு 167

என்பது நான்காவது வாடா நறுமலர்.

‘'என்பொனே’ (5.13) என்னும் குறுந்தொகைப் பதி கத்தில்,

பழகி கின்னடி சூடிய பாலனைக் கழகின் மேல்வைத்த காலனைச் சாடிய அழக னே அணி வீழி மிழலையுள் குழக னேஅடி யேனைக் குறிக்கொளே. (8)

என்பது எட்டாவது பாடல். கயிலாயமலை’ (6.51) என்று தொடங்கும் திருத்தாண்டகச் செந்தமிழ் மாலையில்,

மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார் வாழ்கொளிபுத் தூரார் மாகா ளத்தார் கறைக்காட்டுக் கண்டனார் காபாலியார்

கற்குடியார் விற்கொடியார் கானப் பேரார் மறைக்காட்டுங் குழிவிழிகண் பல்பேய் சூழ

பழையனூர் ஆலங்காட் டடிகள் பண்டோர் மிறைக்காட்டுங் கொடுங்காலன் வீடப் பாய்ந்தார்

வீழி மிழலையே மேவி னாரே (7)

என்பது ஏழாவது நறுமலர். இதற்கு அடுத்த பதிகமான ‘கண்ணவன் காண்’ (6.52) என்று தொடங்குவதும் இத் தலத்தைப்பற்றியதே. இதில், -

மெய்த்தவன்காண், மெய்த்தவத்தில் நிற்பார்க் கெல்லாம்

விருப்பிலா இருப்புமண வினையர்க் கென்றும் பொய்த்தவன்காண்; புத்தன் மறவா தோடி

யெறிசல்லி புதுமலர்க ளாக்கி னான்காண்; உய்த்தவன்காண்; உயர்கதிக்கே உள்கி னாரை

உலக னைத்தும் ஒளித்தளித்திட் டுய்யச் செய்யும் வித்தகன் காண்; வித்தகர்தாம் விரும்பி யேத்தும்

விண்ணிழிதன் வீழி மிழலை யானே. (8)

என்பது எட்டாம் பாசுரம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/210&oldid=634209" இலிருந்து மீள்விக்கப்பட்டது