பக்கம்:நாவுக்கரசர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xviii

யாடிப் பெறும் இன்பம் மறுமையில் அடையும் வீட்டின்பத் தினும் மேலானது என்பதனை,

‘தவலருங் தொல்கேள்வித் தன்மை புடையார் இகலிலர் எஃகுடையார் தம்முள் குழீஇ நகலின் இனிதாயின் காண்பாம் அகல்வானத்து உம்பர் உறைவார் பதி’

-நாலடி. 137

என்னும் நாலடியார்ச் செய்யுள் நாடகப் பாங்கில், கவிதை நயம்படக் காட்டியுள்ளது. இலக்கியத்தில் போலவே, சமயவாழ்லில் குறிப்பாகப் பக்தித் துறையில் ஈடுபட்டிருப் போரும் தாம் போற்றும் இறை நலத்தைத் துய்ப்பதைவிட மேலான இன்பம் இல்லை என்றே கருதுவர். தாம் ஏற்றுப் போற்றும் தெய்வத்தை உளமார நினைத்து, வாயார வாழ்த்தி, உடலார வழிபட்டு அடையும் இன்பத்தினும் உயர்ந்த இன்பம் இல்லை என்பதனைப் பக்தி வழி நின்ற சான்றோர்களின் வாழ்வாலும் வாக்காலும் உணரலாம். திருமாலடியாராகிய தொண்டரடிப் பொடியாழ்வார், அரங்கப்பெருமானை, அச்சுதா, அமரர் ஏறே, ஆயர்தம் கொழுந்தே என்பனவாகக் கூறி வாயினிக்கப் புகழ்ந்து பாடும் இன்பத்திற்கு வேறாக இந்திரப் பெரும் பதமும் வேண்டியதில்லை என்று உறுதி கூறுகின்றார். அப்பாசுரம் வருமாறு:

பச்சைமா மலையோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே.

--திருமாலை-1

சிவனடியாராகிய திருநாவுக்கரசர் தாமுகந்த சிவபெருமான் திருக்கோலத்தைக் கண்ட கண்களால் காண்பதற்கு வேறொன்றுமில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். அவர் அருளிய திருப்பாடல் வருமாறு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/21&oldid=634208" இலிருந்து மீள்விக்கப்பட்டது