பக்கம்:நாவுக்கரசர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xix

பாளை யுடைக்கமு கோங்கிப் பன்மாடம் நெருங்கியெங்கும் வாளை யுடைப்புனல் வந்தெறி வாழ்வயல் தில்லை தன்னுள் ஆள வுடைக்கழல் சிற்றம்பலத்தரன் ஆடல் கண்டால் பீளை புடைக்கண் களாற்பின்னைப் பேய்த்தொண்டர்

காண்பதென்னே. -அப்பர் தேவாரம் 4.81, !

ஆழ்வார்களும் நாயன்மார்களுமாகிய அருட்சான் றோர்கள் இவ்வாறு தாம் வணங்கும் தெய்வத்தைப் பரவி யும் பார்த்தும் பெற்ற அருளார் இன்ப அநுபவங்களை, இசை நலஞ் சான்ற பாடல்களில் தேக்கி வழங்கியுள்ள பக்திப் பனுவல்களே திவ்வியப் பிரபந்த, தேவார திருவாச கங்களாகும்; இலக்கிய நயமும் பக்தி நலமும் ஒருங்கே திகழும் அருட் கருவூலங்களாகும்; இயலும் இசையும் கூத்தொடு கலந்து களிநடம் புரியும் வண்ண மலர்ச் சோலைகளாகும்.

மாணிக்கவாசகர் சிற்றம்பலப் பெருமானைக் குறிப் பிடும் போது, அவன், நினைத்தாலும் பேசினாலும் கண் டாலும் அவ்வாறு செய்யும ஒவ்வொரு தடவையிலும் உலப்பிலாத ஆனந்தத் தேனை அளிக்கவல்ல கூத்துடைய வன் என்று கூறுகின்றார். வண்டினை விளித்துக் கூறும் பாங்கில் அமைந்த அந்த அமுதவாசகம் வருமாறு:

தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே நினைத்தொறும் காண்தொறும் பேசுக்தொறும் எப்போதும் அனைத்தெலும்பு உள்நெக ஆனநதத் தேன்சொரியும் குனிப்புடை யானுக்கே சென்று தாய் கோத்தும்பி !

-திருவாசகம் . கோத்தும்பி-3

குனிப்புடையானின் சிறப்பாகக் கூறப்பட்ட நினைத் தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும்பு உள்நெக ஆனந்தத் தேன்சொரியும்’ இயல்பு, அவன் புகழ் பேசும் திருவாசகத்திற்கும், அதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/22&oldid=634219" இலிருந்து மீள்விக்கப்பட்டது