பக்கம்:நாவுக்கரசர்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காழிப் பிள்ளையாருடன் தல வழிபாடு 169

என்பது ஒன்பதாவது பாடல். இப்பதிகம் முழுவதும் உடல் பற்றிய நினைவுகளே மீதுரர்ந்து நிற்கின்றன. இப்போக்கை நோக்கினால் நாவுக்கரசரின் மிக முதுமையில் இஃது பாடி யருளியிருக்க வேண்டும் என்பது தெரிய வரும். பாடல்கள் யாவும் பன்முறை படித்து அநுபவிக்கத் தக்கவை.

கண்டபேச்சினிற் (5-70) என்ற திருக்குறுந் தொகைப் பதிகத்தில்,

வெம்பு நோயும் இடரும் வெறுமையும்

துன்பு முந்துய ரும்மெனும் சூழ்வினை

கொம்ப னார்பயில் கொண்டிச் சுரவனை

எம்பி ரானென வல்லவர்க் கில்லையே. (6)

என்பது ஆறாவது பாடல். இப்பதிகத்தின் வரலாறு பற்றிய குறிப்பு கிடைத்திலது. புகலூரில் பொய்ப்பாசம் போக்கு வதற்குமுன், நாவுக்கரசர், புகலூருக்கு அருகேயுள்ள இத் தலத்திற்குப் போந்து வழிபட்டிருக்கலாம் எனக் கருத இடம் உண்டு. -

கொண்டீச்சரத்து எம் பெருமானிடம் பிரியா விடை பெற்றுக்கொண்டு ஆளுடைய பிள்ளையாரும் ஆளுடைய அரசரும் திருவாஞ்சியம்’ என்னும் தலத்திற்கு வருகின்ற றனர். தலத்திறைவனை வழிபடுகின்றனர் (இப்போது பதிகம் பாடவில்லை). திருவாஞ்சியத்திலிருந்து திருத்தலை யாலங்காடுக் என்னும் திருத்தலத்திற்கு வருகின்றனர். தொண்டர்க்குத் தூநெறியாய் (6.79) என்ற முதற் குறிப் புடைய திருத்தாண்டகச் செந்தமிழ் மாலை பாடித் தலத்துப் பெருமானைச் சேவிக்கின்றார். இதில்,

13. வாஞ்சியம். முன்னரே காட்டப்பெற்றது. பக். 130 காண்க. . . . . .

14. தலையாலங்காடு: நாகூர்-தஞ்சை இருப்பூர்திப் பாதையில் கொரடாச்சேரி என்ற நிலையத்திலிருந்து 6 கல் தொலைவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/212&oldid=634211" இலிருந்து மீள்விக்கப்பட்டது