பக்கம்:நாவுக்கரசர்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 நாவுக்கரசர்

கங்கையெனும் கடும்புனலைக் கரந்தான் தன்னைக் காமருபூ பொழிற்கச்சிக் கம்பன் தன்னை அங்கையினில் மான்மறியொன் றேந்தி னானை

ஐயாறு மேயானை ஆரூரானைப் பங்கமிலா அடியார்க்குப் பரிந்தான் தன்னைப் பரிதிகிய மத்தானைப் பாசூ ரானைச் சங்கரனைத் தலையாலங் காடன் தன்னைச்

சாராதே சாலங்ாள் போக்கினேனே. (5)

என்பது தமிழ் மணங் கமழும் ஐந்தாவது வாடா நறுமலர். நறுமலர்கள் அனைத்தும் பாடி அநுபவிக்கத் தக்கவை.

தலையாலங்காடனிடம் விடைபெற்றுக்கொண்டு திருப் பேரெயில் வருகின்றனர். மறையும் ஒதுவர் (5.16) என்னும் திருக்குறுந்தொகைப் பதிகத்தால் தலத்துப் பெருமானை வழிபடுகின்றார் அப்பர் பெருமான். .

முன்னை யார்மயி லூர்தி முருகவேள், தன்னை யாரெனில் தானோர் தலைமகன் என்ன்ை யாளும்இ றையவ னெம்பிரான் பின்னை யாரவர் பேரெயி லாளரே, (7)

என்பது ஏழாவது திருக்குறுந்தொகை.

திருப்பேரெயில் ஈசனிடம் விடைபெற்றுக்கொண்டு இரு பெருமக்களும் திருமறைக்காட்டை அடைகின்றனர்.

15, பேரெயில் (திருப்பேரெயில்) : ஒகைப் பேரையூர் என்பது மக்கள் வழங்கும் பெயர். தஞ்சை - நாகூர் இருப் பூர்திப் பாதையில் திருவாரூரையொட்டியுள்ள குழிக் கரை என்னும் நிலையத்திலிருந்து 3 கல் தொலைவு. காவிரியின் தென் கரைத்தலம்.

16. மறைக்காடு(வேதாரண்யம்): திருத்துறைப்பூண்டி . கோடிக்கன்ர இருப்பூர்தி வழியிலுள்ள வேதாரண்யம் என்ற நிலையத்திலிருந்து ; கல் தொலைவு. வேதங்கள் பூசித்து மூடிவிட்டுச் சென்றிருந்த கதவுகளைப் பதிகம் பாடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/213&oldid=634212" இலிருந்து மீள்விக்கப்பட்டது