பக்கம்:நாவுக்கரசர்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 நாவுக்கரசர்

குரிய காரணமாகும். நாவுக்கரசர் வேண்டிய வண்ணம் மறைக்காட்டுப் பெருமான் விரைவில் திருக்கதவம் திறக்கத் தாழ்த்தமைக்குரிய உண்மையான காரணம் என்ன? அப் பரடிகள் பாடிய செந்தமிழ்ப் பாடல்களின் சுவை நலங் களைத் தாம் துய்த்து மகிழ வேண்டும் என்னும் பெரு வேட்கையேயாகும். இது,

பண்ணி னேரு மொழியாளென்

றெடுத்துப் பாடப் பயன்துய்யான்

தெண்ணி ரணிந்தார் திருக்காப்பு நீக்கத் தாழ்க்க: -

என வரும் சேக்கிழார் பெருமானின் திருவாக்காலும் நன்கு அறியப்படும்.

இனி, நாவுக்கரசர் தாம் முன்னரே உணர்ந்துகொள் ள்ாத இறைவனது திருக் குறிப்பாக எதனைக் கருதினார்? இதனையும் சிந்தித்து அறிதல் இன்றியமையாதது. ஒருவர் பால் ஒன்றைக் குறித்து வேண்டுவோர் அப்பொருள் நலம் குறித்துத் தம் உள்ளத்தில் நன்றாகக் சிந்தித்த பின்னரே அதுபற்றிய தம் வேண்டுகோளைத் தெளிவாக வெளியிடும் ஆற்றல் பெற்றோராவர். பண்டை நாட்களில் மறைகளால் அடைக்கப்பெற்று நெடுங்காலமாகத் திறக்கப்படாதிருந்த திருக்கதவினைத் திருக்காப்பு நீக்கி நேர்முக வழியேசென்று மறைக்காட்டு இறைவனை வழிபடுதல் வேண்டும் என முதன்முதலாக நினைத்தவர் காழிப்பிள்ளையார். ஆகவே அப்பர் பெருமான், ஞானப் பிள்ளையார் என்னைக் காட்டிலும் செந்தமிழ் தலம் சிறக்கப் பாடித் திருக்கதவினை அடைப்பித்தருளினார். அவரே திறக்கப் பாடுதற்குரிய உரிமையும் ஆற்றலும் உடையவர். இதனைச் சிறிதும் எண்ணாத எளியேன் அன்பிற்சிறந்த பிள்ளையாரது வேண்டுகோட்கிசைந்து மறைக் கதவினைத் திறக்கப்

24. , பு: திருநாவுக். 268.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/225&oldid=634225" இலிருந்து மீள்விக்கப்பட்டது