பக்கம்:நாவுக்கரசர்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காழிப் பிள்ளையாருடன் தல வழிபாடு #83

பாடியது என் மனத்தோடு பொருந்திய உறுதியான வேண்டுகோளாகாது. இங்ஙனம் என் மனத்திற் பதியாத நிலையில் மறைக்காட்டு இறைவனை நோக்கிக் கண்ணி னால் உமைக் காணக் கதவினைத் திண்ணமாகத் திறந் தருள் செய்மினே’ (5.10:1) எனவும், அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர், இரக்கம் ஒன்றிவீர் எம்பெருமானிரே” (5-10:11) எனவும் வருந்தி வேண்டியது இறைவனது திருக் குறிப்பினை உணராததால் செய்த பிழையாகும், இங்ஙனம் எளியேன் பிழையாக நடந்துகொண்டு தொடுத்த வெற். றுரையினையும் மெய்யான வேண்டுகோளாக ஏற்றுக் கொண்டு இறைவன் மறைக்கதவினைத் திறந்தருளினன்” என்று தம் நெஞ்சில் கவலையும் அச்சமும் உடையவராக இருக்கின்றார். பின்னர் வாய்மூர் இறைவனின் திருவரு ள்ால் அவை நீங்கி மகிழ்வுற்றனர். இதனை அவர் வாய் மூர்ப் பெருமானைத் தொடர்ந்து சென்று பாடிய திருக் குறுந்தொகைப் பதிகத்தில்,

திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ் உறைப்புப் பாடி அடைப்பித்தார் உக்கின்றார் (5.50:8)

எனவும்,

தனக்கே றாமை தவிர்கென்று வேண்டினும் நினைத்தேன் பொய்க்கருள் செய்திடு கின்மலன் (5.50:9)

எனவும் தம்மைப்பற்றிக் கூறும் திருப்பாடற் பகுதிகளால் தெள்ளிதிற் புலனாகும்.

காழிப் பிள்ளையாரும் நாவுக்கரசர் பெருமானும் திருவாய்மூர் இறைவனை வணங்கி அவரிடம் விடை பெற்றுக் கொண்டு திருமறைக்காடு திரும்பி அங்கு சில நாட்கள் தங்குகின்றனர். அப்பர் பெருமான் மறைக்காட்டு இறைவன்மீது ஐந்து திருப்பதிகங்கள் பாடிப் போற்று கின்றார். ஒரு பதிகத்தை (5-10) மேலே குறிப்பிட்டு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/226&oldid=634226" இலிருந்து மீள்விக்கப்பட்டது