பக்கம்:நாவுக்கரசர்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 நாவுக்கரசர்

பாடப் பெற்ற சந்தர்ப்பத்துடன் விளக்கின்ோம். ஏனைய வற்றை ஈண்டுக் காட்டுவோம். இவை சின்னாட்கள் தங்கி யிருந்தபோது பாடப் பெற்றவையாகும்.

இந்திரனோடு தேவர்கள்’ (4.33) என்ற திருநேரிசைப் பதிகத்தில்,

கால்கொடுத் திருகை ஏற்றிக்

கழிநீரைத் திறைச்சி மேய்ந்து தோல்படுத் துதிர ரோல்

சுவரெடுத் திரண்டு வாசல் ஏல்வுடைத் தாவ மைத்தங்

கேழுசா லேகம் பண்ணி மால்கொடுத் தாவி வைத்தார்

மாமறைக் காட னாரே, (4)

என்பது நான்காவது திருநேரிசை. இது நாம் மெய் என்று கருதும் பொய்யான உடல் கூற்றினை விளக்குவது; இப் பதிகத்தின் பாடல்கள் அனைத்துமே படிப்போரின் உள் ளத்தை உருக்குபவை. தேரையும் மேல் கடாவி’ (4.34) என்று தொடங்கும் திருநேரிசைப் பதிகமும் மறைக்காட னாரைப் பற்றியதே. இதில், -

அந்தரங் தேர்க டாவி •.

யாரிவ னென்று சொல்லி உந்தி னான்மா மலையை

ஊன்ற லும்ஒள் ளரக்கன் பந்தமாம் தலைகள் பத்தும்

வாய்கள்விட் டலறி வீழச் சிந்தனை செய்து விட்டார்

திருமறைக் காட னாரே (4)

என்பது நான்காவது திருநேரிசை. இந்த நேரிசை முழுவதும் கயிலை நினைவோடு பாடியது. இராவணனையும்’ அவ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/227&oldid=634227" இலிருந்து மீள்விக்கப்பட்டது