பக்கம்:நாவுக்கரசர்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காழிப் பிள்ளையாருடன் தல வழிபாடு 185

னுக்கு அருளிய முறையையும் இதில் காணலாம். பாடல்கள் யாவும் படித்து அநுபவிக்கத் தக்கவை. ஒதமால் கடல்” (5.9) என்று தொடங்கும் திருக்குறுந்தொகைப் பதிகத்தில்,

சங்கு வந்தலைக் குந்தடங் கானல்வாய் வங்க மார்வலங் கொள்மறைக் காடரோ கங்கை செஞ்சடை வைப்பதும் அன்றியே அங்கை யில்அனல் ஏந்தல் அழகிதே (8)

என்பது எட்டாவது திருக்குறுந்தொகை. துண்டு சுட ரனைய'(6.23) என்று தொடங்கும் திருத்தாண்டகச் செந் தமிழ் மாலையில்,

மூல நோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய்;

முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்; ஆலின்கீழ் நால்வர்க் கறத்தான் கண்டாய்;

ஆதியும் அந்தமும் ஆனான் கண்டாய், பால விருத்தனும் ஆனான் கண்டாய்;

பவளத் தடவரையே போல்வான் கண்டாய்; மாலைசேர் கொன்றை மலிந்தான் கண்டாய்;

மறைக்காட் டுறையும் மணாளன் தானே. (9)

என்பது ஒன்பதாவது வாடா நறுமலர்த் தாண்டகம்.

இருபெரு நாயன்மார்களும் சேர்ந்து திருமறைக் காட்டில் இருக்கும்போது தென்னன் தேவியும் வளவர் கோன் பா ைவ யு மான மங்கையர்க்கரசியாராலும் அமைச்சர் குலச்சிறையாராலும் அனுப்பப்பெற்ற துரது வர்கள் காழிப் பிள்ளையாரைக் காண வருகின்றனர். வந்த வர்கள் புகலி வேந்தரை வணங்கி நின்று பாண்டிய நாட் டில் சமணர்கள் சைவர்கட்குச் செய்யும் இடையூறுகள் பொறுக்கத்தக்கன அல்ல என்பதை எடுத்துரைக்கின்றனர். இதனைக் கேட்ட சண்பைத் திருமறையவர் தென்னாட்டில் சமணர்கள் செய்யும் தீமைகளைச் சைவநெறியை நிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/228&oldid=634228" இலிருந்து மீள்விக்கப்பட்டது